ஹெலிகாப்டர் ஊழல்: மாஜி தளபதி தியாகி, சகோதரர்களிடம் சிபிஐ அதிரடி விசாரணை

தியாகியின் சார்பில் இவர்கள்தான் லஞ்சப் பணத்தை வாங்கினார்கள் என்பது குற்றச்சாட்டு. அதுதொடர்பாக இந்த மூவரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட தியாகி மற்றும் அவரது சகோதரர்கள் ஜூலி, ராஜீவ் மற்றும் டோஸ்கா தியாகி ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் குழு தீவிர விசாரணை நடத்தியது.
கடந்த 2010ம் ஆண்டு இத்தாலியின் பின்மெக்கானிகா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேன்ட்டிடமிருந்து ரூ. 4000 கோடி மதிப்பிலான 12 ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா முயற்சி மேற்கொண்டது இந்த ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக இத்தாலியில் சர்ச்சை கிளம்பியது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய இத்தாலிய அதிகாரிகள், முன்னாள் விமானப்படைத் தலைவர் எஸ்.பி.தியாகியின் சகோதரர்கள்தான் இதில், தியாகி சார்பில் இடைத்தரகர்களிடமிருந்து லஞ்சப் பணத்தைப் பெற்றதாக குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஒரு இடைத்தரகரான குய்டோ ஹெஸ்கி இதுகுறித்து கூறுகையில்,தியாகியின் சகோதரர்களிடம் 1 லட்சம் ஈரோ பணத்தைக் கொடுத்ததாக தெரிவித்தார். இப்பணத்தின் ஒரு பகுதி தியாகியிடமே நேரடியாகப் போய்ச் சேர்ந்ததாகவும் அவர் கூறினார்.
ஆனால் இதை தியாகி மறுத்துள்ளார். தான் ஓய்வு பெற்று 3 ஆண்டுகளுக்குப் பின்னரே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது அவரது வாதமாகும். ஆனால் ஹெலிகாப்டர் வாங்கிய விவகாரத்தில் நிதி முறைகேடு நடந்திருப்பதாக சிபிஐ ஆணித்தரமாக கூறியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications