ஜெயலலிதாவிற்காக தஞ்சையில் தயாராகும் ‘பொன்னியின் செல்வி’ சிலை

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் விவசாயிகள் சார்பில் இம்மாதம் 9ம் தேதி மாலை முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடக்கிறது. இதற்காக கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட மேடை பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடு பணிகள் குறித்து போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இவ்விழாவில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் ஜெயலலிதா தஞ்சை வருகிறார். சென்னையிலிருந்து முதல்வர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளும், நேரடியாக ஏற்பாட்டு பணிகளை மேற்பார்வையிட்டு சென்றுள்ளனர்.
இந்த பாராட்டு விழா பற்றி செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காவிரி பாசன விளை பொருள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க செயலர் மன்னார்குடி ரங்கநாதன், காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை முதல்வர் ஜெயலலிதா பெற்று கொடுத்தார் என்றார். இதற்காக தமிழக விவசாயிகள் அனைவரும் முதல்வருக்கு நன்றி கூறும் வகையில் தஞ்சையில் இந்த பாராட்டு விழா நடக்க இருக்கிறது.
விழாவில் காவிரி நதிநீர் உரிமையை மீட்டு தந்ததை நினைவுபடுத்தும் வகையில் காவிரியின் மகளை குறிப்பிடும், பொன்னியின் செல்வி சிலையை முதல்வருக்கு பரிசாக வழங்கவுள்ளோம். இதற்காக சிலை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த விழாவில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுமக்கள் பங்கேற்பர் என்று அவர் கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications