சாவேஸுக்கு அஞ்சலி..அண்ணா மறைந்தபோது மக்கள் கதறியது நினைவுக்கு வருகிறது.: கருணாநிதி

சாவேஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த வெனிசுலாவின் குடியரசுத் தலைவர் அந்த நாட்டின் இணையற்ற தலைவர் என்று புகழப்பட்ட ஹியூகோ சாவேஸ் அறுவைச் சிசிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறி வருகிறார் என்ற நல்ல செய்தி உலகெங்கிலுமுள்ள ஆதிக்க எதிர்ப்புச் சக்திகளுக்கு ஆறுதல் அளித்து வந்த நிலையில் திடீரென அவர் தனது 58-வது வயதில் மறைந்தது என் மனதைப் பெரிதும் வாட்டுகிறது.
'வெனிசுலாவின் புரட்சி வீரர்'
'வெனிசுலாவின் புரட்சி வீரர்' என்று புகழப்பட்ட வர்தான் சாவேஸ். சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகும் நிலைத்து நின்ற கம்யூனிச அரசாங்கங்களில் முதல் இடம் வெனிசுலாவிற்குக் கிடைக்கக் காரணமாக இருந்தவர் சாவேஸ்தான். அண்மையில் அங்கே நடைபெற்ற தேர்தலில் சாவேஸ் நான்காவது முறையாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியில் தொடர்ந்தார். இந்த வெற்றிக்குப் பிறகு, தான் நினைத்த அரசியல் மாற்றங்களைச் செய்ய முடியாத அளவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டார். கடந்த டிசம்பர் மாதத்தின்தான் கியூபா நகரிலே சாவேஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
காஸ்ட்ரோவின் தோழமை
அதற்கு பிறகும் முழுமையாக உடல்நலம் தேறாத நிலையில் தாயகம் திரும்பிய சாவேஸ்சுக்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டு ராணுவ மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காத நிலையில் சாவேஸ் மறைந்து விட்டார். சாவேஸ்சின் அரசியல் ஆசான் பிடல் காஸ்ட்ரோ. இவருக்கு சேகுவேரா எவ்வளவு நெருங்கி, தோழமையோடு இருந்து புரட்சியில் பங்கெடுத்து அதில் வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்தாரோ, அதைப் போலவே பிடல் காஸ்ட்ரோவின் சோஷலிசச் சித்தாந்தங்களிலும், புரட்சிகர யுக்திகளிலும் ஈடுபாடு கொண்டு மிகுந்த தோழமையோடு பழகியவர் தான் சாவேஸ்.
அண்ணாவின் மறைவு...
1998-ம் ஆண்டு முதல் இதுவரை யாரும் அசைக்க முடியாத அளவிற்கு ஏகாதிபத்திய சக்திகளுக்கு சவாலாக, உழைக்கும் சமுதாயத்தின் உன்னத உந்து சக்தியாக, லத்தீன் அமெரிக்காவின் பெருமைமிகு பிதாமகனாக, பதினான்கு ஆண்டுக் காலம் அந்த நாட்டின் குடியரசுத் தலைவராக சாவேஸ் புகழாட்சி செய்து வந்தார். அவர் மறைந்த செய்தி கேட்டு, அந்த நாட்டின் லட்சோபலட்சம் சாதாரண சாமான்ய மக்கள் ஆற்றாது அழுது புலம்பியதைத் தொலைக்காட்சியில் நான் கண்டபோது, நம்முடைய அண்ணா மறைந்த போது மக்கள் கதறியழுதார்களே, அந்த நினைவு தான் மேலோங்கிற்று. போராளியாக வாழ்க்கையைத் தொடங்கிய சாவேஸ்-சை புற்றுநோய் 58 வயதிலேயே பலி கொண்டு விட்டது. சாவேஸ்சின் மறைவு வெனிசுலா நாட்டிற்கு மட்டுமல்ல, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும், ஏன் பொதுவுடைமை தத்துவங்களைப் பின்பற்றும் உலக நாடுகள் அனைத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும் என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications