டெல்லி பலாத்கார சம்பவம் விசித்திரமானது அல்ல..: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கபீர்
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மட்டுமே விசித்திரமானது இல்லை. இதைப் போன்ற பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் கூறியுள்ளார்.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், டெல்லி மாணவி பாலியல் பலாத்கார சம்பவம் மிகவும் வேதனைக்குரியது, அசாதாரணமானது. ஆனால் அது ஒன்றுதான் அப்படியான சம்பவமும் அல்ல.. அந்த சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் அதை ஒரு அடையாளச் சின்னமாக மாற்றிவிட்டன. சம்பவம் நடைபெற்ற மறுநாள் அதற்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்து பத்திரிகைகள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. இப்படி ஒரு அடையாள சின்னத்தை நாம் உருவாக்கக் கூடாது.
ஏனெனில் அதே நாளில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு, ஊடகங்கள் எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. அந்த சம்பவம் வரிச் செய்திகளாகி விட்டன.
டெல்லி மாணவி குடும்பத்திற்கு அரசுகளும், பல்வேறு அமைப்புகளும் பெருந்தொகையை நிவாரணமாக வழங்கின. ஆனால் அந்த தலித் சிறுமிக்கு என்ன நேர்ந்தது என்று யாருக்காவது தெரியுமா? பெண்களுக்கு எதிரான குற்றங்களை இப்படி அணுகுவது தவறானது. இந்த அணுகுமுறையில் மாற்றம் அவசியம் என்றார்.












Click it and Unblock the Notifications