நல்லாட்சி அளித்தால் தவறுகளை மக்கள் மன்னிப்பார்கள்: மோடி

Subscribe to Oneindia Tamil

Narendra modi
அகமதாபாத்: நல்லாட்சியை ஆட்சியாளர்கள் அளித்தால் அவர்களின் தவறுகளை மக்கள் மன்னித்துவிடுவார்கள் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

OFBJP "என்ற அமெரிக்காவில் வாழும் பாரதிய ஜனதா கட்சியின் நண்பர்கள்"அமைப்பினருக்காக வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் இன்று உரையாற்றினார். அவர் தமது உரையில், என்னைப் பொறுத்தவரையில் ஒரே இந்தியா- தலைசிறந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான் தாரக மந்திரம். மதச்சார்பின்மைக்கான விளக்கம் என்னவென்று கேட்டால் ‘முதலில் இந்தியா' மற்றவையெல்லாம் பிறகுதான். நாம் எதைச் செய்தாலும் இந்தியாவுக்கானதாகவே அது இருக்க வேண்டும். இந்தியாவை நாம் முன்னிறுத்தி செயல்பட்டால் மதச்சார்பின்மை இயல்பாகவே ரத்ததில் கலந்து விடும். நாம் எங்கு வசித்தாலும் நமது கலாச்சாரம், பாரம்பரியத்தை நினைவில் கொள்ள வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களால் ஆன அனைத்து வகையிலும் உதவ வேண்டும். இந்தியாவை பார்த்திராத இந்திய வம்சாவழி குழந்தைகள் தற்போது இந்தியாவில் சமூக சேவைகளில் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இது ஒரு நல்ல அம்சம்.

ஆசியாவின் கைகளில் 21-ம் நூற்றாண்டு

கடந்த 30 ஆண்டுகளாக 21-ம் நூற்றாண்டை எந்த நாடு தலைமை ஏற்று நடத்திச் செல்லும் என்ற கேள்வி இருந்து வருகிறது. 19ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவின் வசம் இருந்தது. நாம் காலனிநாடாக இருந்திருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும். நாம் காலனித்துவ நாடாக இருந்ததால் அந்த வாய்ப்பு நம் கைகளில் இருந்து நழுவிப் போனது. 20-ம் நூற்றாண்டில் தமது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டிருந்த நேரத்தில் மகாத்மா காந்தி தலைமையில் நாம் தேச விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்தோம். இப்போது இந்த 21-ம் நூற்றாண்டு ஆசியாவின் கைகளில் இருக்கிறது. வாஜ்பாய் நாட்டின் பிரதமராக இருந்த போது இந்தியாவால் சில விஷயங்களை செய்ய முடிந்தது. இந்தியா அணு ஆயுத சோதனையை நடத்தியது. இதன் மூலம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நமது நாட்டின் வல்லமை மீதான நம்பிக்கை புதுப்பிக்கப்பட்டது. அந்த நிலைமை நீடித்திருந்தால் இந்தியாவின் கைகளில் உலகம் இருந்திருக்கும். ஆனால் கடந்த 6-7 ஆண்டுகாலமாக அப்படி எதுவும் நடைபெறவில்லை.

நல்லாட்சி..ஒளிக் கீற்று

ஒரு அரசு சிறந்த முறையில், தன்னலமின்றி சேவையாற்றினால், ஆட்சியாளர்களின் தவறுகளை மக்கள் மன்னித்து விடுவார்கள். இந்தியாவில் இப்போது இருள் படர்ந்த ஆட்சி இருந்தபோதும், குஜராத் மாநிலம் அதில் நம்பிக்கை ஒளிக் கீற்றாக உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பலநாடுகளை பொருளாதார நெருக்கடி பதம் பார்த்தது. ஆனால் குஜராத் மாநிலமோ ஒருபோதும் வளர்ச்சிப் பணிகளை நிறுத்திக் கொண்டதே இல்லை. குஜராத் மாநிலத்தை தொழில்துறையினர் விரும்பும் மாநிலமாக உருவாக்கினோம். அனைத்து பிரச்சனைகளுக்கும் வளர்சி ஒன்றே தீர்வாகும். இதை குஜராத் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. சட்டசபை தேர்தல் வெற்றி என்னுடையது அல்ல.. குஜராத் மக்களுடையது.

இன்றைய உலகம் குளோபல் வார்மிங் பற்றி பேசுகிறது. நமது வழிபாட்டு முறையே இயற்கை சார்ந்தது. விலங்குகள் சார்ந்ததாக இருக்கிறது. அதைக் கடைபிடித்தால் போதும். எலியும் பாம்பும் ஒரே இடத்தில் இருக்க முடியுமா? என்று கேட்கப்படுவது வழக்கம். இருக்க முடியும் என்கிறது ஆன்மீகம். சிவன் வீட்டில் பாம்பும் எலியும் இருக்கிறதே.. அனைவருக்கும் மகாசிவராத்திரி வாழ்த்துகள் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+