Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீர்மானம் பற்றி அமெரிக்காவிடம் பேசிப் பாருங்களேன்: இந்தியாவின் ஆலோசனையை நிராகரித்த இலங்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் குறித்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு இந்தியா அளித்த ஆலோசனையை இலங்கை அரசு நிராகரித்துவிட்டது.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை கோரி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தின் நகல் பல்வேறு நாட்டு பிரதிநிதிகளுக்கு கடந்த 7ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்மானம் நிறைவேற வழிவகை காணுமாறு இலங்கை அரசுக்கு இந்தியா ஆலோசனை வழங்கியது. ஆனால் இலங்கை இந்தியாவின் ஆலோசனையை நிராகரித்துவிட்டது.

இது குறித்து அமெரிக்க பிரதிநிதி எய்லீன் டானஹு ஏற்பாடு செய்த கூட்டத்தில் இலங்கையைச் சேர்ந்த ரவிநாதா ஆர்யசின்ஹா கூறுகையில்,

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த எங்கள் நாடு உத்தேசிக்கவில்லை. அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் சாராம்சத்தை இலங்கை நிராகரிக்கிறது. கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கை அங்கீகரிக்கவில்லை. இருப்பினும் அந்த தீர்மானத்தில் இருந்த ஒரு சாதகமான அம்சம் என்னவென்றால் இலங்கை அரசின் ஒப்புதலோடு மட்டுமே மனித உரிமைக்கள் ஆணையர் அலுவலகம் ஆலோசனை வழங்க வேண்டும் என்று இருந்தது.

இந்த விவகாரம் குறித்து அறிக்கை அளிக்குமாறு மனித உரிமை கவுன்சில் ஆணையர் அலுவலகத்தை கேட்டுக் கொண்டது. ஆனால் மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை இதற்கு மாறாக செயல்பட்டுள்ளார். அவர் அளித்துள்ள அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் தன்னிச்சையாகவும், தேவையில்லாமல் தலையிடுவதாகவும், அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவும் உள்ளன.

இலங்கையில் போர்ப் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைம் ஆகியவற்றின் பரிந்துரைகளின்படி மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணிகளுக்கு நவி பிள்ளை அங்கீகாரம் அளிக்கவில்லை.

நவி பிள்ளை பாரபட்சமாக தயாரித்து அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவைகளை அமல்படுத்தக் கோரி அமெரிக்க வரைவு தீர்மானத்தை தற்போது கொண்டு வந்துள்ளது. ஐ.நா. பார்வையாளர்கள் ஒரு நாட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நாட்டின் ஒப்புதல் அல்லது அழைப்பின்பேரில் தான் செல்ல வேண்டும் என்ற ஐ.நா. பொதுச் சபை மற்றும் மனித உரிமை கவுன்சில் தீர்மானங்களுக்கு மாறாக உள்ளது அமெரிக்காவின் தற்போதைய தீர்மானம். அதில், ஐ.நா. பார்வையாளர்கள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி இலங்கை செல்ல அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தீர்மானம் என்ற பெயரில் சில நாடுகளின் பெயர்களை குறிப்பிட்டு அவற்றை அவமானப்படுத்தி தனிமைப்படுத்துவது தேவையில்லாதது. அதிலும் குறிப்பாக இலங்கை 30 ஆண்டு கால போருக்குப் பிறகு மறுசீரமைப்பு பணிகள் செய்து அதில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ள இந்நிலையில் இந்த அணுகுமுறை தேவையில்லாதது என்றார்.

இதற்கிடையே போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை கோரி வலியுறுத்த வேண்டாம் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சாமி அமெரிக்காவை வலியுறுத்தினார். ஆனால் அவரின் முயற்சியும், இலங்கை பிரதிநிகளின் முயற்சியும் வெற்றி பெற்றது போன்று தெரியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+