மதுரையில் இயல்பு நிலை -டெசோ பந்த்தால் பாதிப்பில்லை - 150 திமுகவினர் கைது

டெசோ நிறுவனம் விடுத்த அழைப்புக்கு மதுரையில் பெரிய அளவில் ஆதரவு கிட்டவில்லை. அங்கு கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. தொழில், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம் போல இயங்கின.
ஒரு சில கடைகளை தவிர அனைத்து பகுதிகளிலும் கடைகள்,ஹோட்டல்கள், மார்க்கெட்டுகள் திறந்து இருந்தன. திமுக தொழிற்சங்கங்களை சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக டிரைவர்கள் மட்டும் இன்று பணிக்கு வரவில்லை. ஆனாலும் அனைத்து பஸ்களும் வழக்கம்போல் இயக்கப்பட்டன. திமுக தொழிற்சங்கங்களை சேர்ந்த ஆட்டோக்களை தவிர மதுரையில் 90 சதவீத ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின.
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் கடைகளை அடைக்க வற்புறுத்தியதாக திமுக வட்ட செயலாளர் மூவேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 12 பேரை கரிமேடு போலீசார் இன்று காலை கைது செய்தனர்.
அதேபோல மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே நகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி தலைமையில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்சா, முன்னாள் மேயர் குழந்தைவேலு, மாவட்ட துணைச்செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் ஜெயராமன், கோபிநாதன், ஒச்சுபாலு, ரவீந்திரன், தர்மலிங்கம், கவுன்சிலர்கள் நன்னா, அருண்குமார் உள்பட 150 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல அய்யர் பங்களாவில் புறநகர் மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி தலைமையிலும் மறியலில் ஈடுபட்ட திமுகவினரும் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரத்தில்
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று வழக்கம்போல் பஸ்கள் அனைத்தும் ஓடியது. ஆட்டோக்களும் ஓடியது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன.
ராமநாதபுரம் பஜார் பகுதி, புதிய பஸ் நிலையம், ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை, ரயில் நிலையம் போன்ற இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விருதுநகரில்
விருதுநகர் மாவட்டத்தில் இன்று பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம்பேல் ஓடின. கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு இருந்தன. முக்கியமான இடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications