புதிய போப் ஆண்டவரைத் தேர்வு செய்வதில் கர்தினால்கள் மும்முரம்- புகை குழாய் பொருத்தப்பட்டது!

போப் ஆண்டவராக பொறுப்பு வகித்த ஜெர்மனியைச் சேர்ந்த 16-ம் பெனடிக்ட் பதவி விலகியதையடுத்து புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் வாடிகன் நகரில் நடந்தது. இதில் புதிய போப்பைத் தேர்வு செய்வதற்கு தகுதியான 115 கார்டினல்கள் கலந்துகொண்டனர். இவர்கள் வாடிகன் சென்று ஆலோசனை நடத்தி வந்தனர். இக்கூட்டத்தின் முடிவில் இன்று புதிய போப் ஆண்டவர் தேர்வுக்கான நிகழ்ச்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
கார்டினல்கள்
115 கார்டினல்களும் வாக்களித்து போப் ஆண்டவரை தேர்வு செய்ய உள்ளனர். இந்த 115 கார்டினல்களில் 10 பேர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள், அவர்களில் 5 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர, ஓசியானாவைச் சேர்ந்த ஒருவரும், இத்தலியைச் சேர்ந்த 28 பேரும், பிற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 32 பேரும், வட அமெரிக்காவைச் சேர்ந்த 13 பேரும், லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த 20 பேரும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 11 பேரும் போப் தேர்தலில் வாக்களிக்கிறார்கள்.
வாக்களிப்பு முறை
ஒரு வாக்குச் சீட்டில் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை கார்டினல்கள் எழுதுவார்கள். முடிவில் 3-ல் 2 பங்கு வாக்கைப் பெறுகின்ற கார்டினலே புதிய போப் ஆண்டவராவார். எவருக்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில் அனைத்து வாக்கு சீட்டுகளும் சேகரிக்கப்பட்டு எரிக்கப்படும். அப்போது அந்த அறையின் மேலுள்ள புகை குழாய் வழியாக கரும்புகை வெளியேறும். பெரும்பான்மைக்காக 30 முறை வாக்களிப்பு நடைபெறும். எவருக்குமே அப்படி பெரும்பான்மை கிடைக்காது போனால் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகள் கிடைத்தால் வெற்றி என்ற அடிப்படையில், வாக்கெடுப்பு தொடரும். அப்போது புகை குழாய் வழியே வெண்புகை வெளியே வந்தால் புதிய போப் ஆண்டவர் தேர்வாகிவிட்டார் என்று அறியப்படும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications