டிப்ளமோ படிப்பில் தங்க மெடல் வாங்கிய தூக்குக் கைதி பேரறிவாளன்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்த் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் பேரறிவாளன். அவர் சிறையில் இருந்து கொண்டே மகாத்மா காந்தி சமுதாய கல்லூரி மற்றும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் ஆதரவுடன் சிறை துறை நடத்தி வரும் டிடிபி டிப்ளமோ படிப்பு படித்து வந்தார்.
அவர் டிடிபி டிப்ளமோவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்று சிறை துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தேர்வு எழுதிய 185 கைதிகளில் 175 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் தவிர்த்து முருகன், சாந்தன் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களின் கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்தார். இதை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.












Click it and Unblock the Notifications