ஃப்ரீ ஹேரில் வந்ததால் ராஜஸ்தானில் 35 மாணவிகளின் தலைமுடியை நறுக்கிய தலைமை ஆசிரியை
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி விதிகளை மீறி தலை முடியை கட்டாமல் வந்த 35 மாணவிகளின் முடியை தலைமை ஆசிரியை நறுக்கியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம் போர்டா சுஹாதா கிராமத்தில் அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளி உள்ளது. கடந்த புதன்கிழமை அன்று காலை நேர பிரார்த்தனை கூட்டத்தில் 35 மாணவிகள் தலைமுடியை விரித்துபோட்டபடி வந்து நின்றனர். இது பள்ளி விதிகளுக்கு எதிரானதாகும். இதையடுத்து அந்த இடத்தில் வைத்தே அவர்களின் தலைமுடியை தலைமை ஆசிரியை அனுராதா லொஹேலா நறுக்கினார்.
தங்கள் முடியை வெட்ட வேண்டாம் என்று சில மாணவிகள் கெஞ்சினர், சிலர் அழுதனர். ஆனால் அனுராதா விடவில்லை. இது குறித்து அறிந்த மாணவிகளின் பெற்றோர் தலைமை ஆசிரியையை சந்திக்க பள்ளிக்கு வந்தனர். ஆனால் அவர் பள்ளியிலும் இல்லை, செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பெற்றோர் நடந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தனர். உடனே கல்வி துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து சென்றனர்.
இதையடுத்து அனுராதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் 3 ஆசிரியர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். தண்டனை பெற்ற மாணவிகளில் பெரும்பாலானோர் மூன்றாம் வகுப்பு படிக்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications