பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1 குறைகிறது, டீசல் விலை உயர்கிறது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது. இதையடுத்து பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1 குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.11 நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நஷ்டம் மாறும் வரை மாதாமாதம் டீசல் விலை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி டீசல் விலை லிட்டருக்கு 40 முதல் 50 காசு உயர்த்தப்படுகிறது.
இந்த விலை குறைப்பு மற்றும் உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.50ம், மார்ச் 2ம் தேதி ரூ.1.40ம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பாரல் ஒன்றுக்கு 131 அமெரிக்க டாலரில் இருந்து 120 டாலராக குறைந்துள்ளதால் பெட்ரோல் விலையும் குறைக்கப்படுகிறது.
தற்போது டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.70.74க்கு விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications