பெண் நோயாளிகளின் அந்தரங்கத்தை படம் பிடித்த ஜேம்ஸ் பாண்டு வாட்ச்: இந்திய டாக்டர் கைது
லண்டன்: டாவிண்டெர்ஜித் பெயின்ஸ் ( 45 ) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டராக, இங்கிலாந்தின் ராயல் வூட்டன் பசெட் என்ற சிறிய நகரத்தில் பணிபுரிந்து வந்தார். சென்ற ஜூன் மாதம் இவரிடம் சிகிச்கைக்காக வந்த 19 வயதுடைய பெண் ஒருவர், டாக்டரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து, பெயின்ஸ் தன்னிடம் தவறாக நடந்து கெண்டதாகவும், அதனைப்படம் பிடித்தது போல் தனக்குத் தோன்றியதாகவும் கூறி புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து மார்க் கரீட் என்ற துப்பறியும் நிபுணர் இதனை ஆராய்ந்ததில், பெயின்ஸ் நடத்திய லீலைகள் வெளிச்சத்துக்கு வந்தது.
பெயின்ஷஸ்ஸிடம் வைத்தியம் பார்க்க வரும் 14 வயதிலிருந்து 51 வயதுடைய பெண் நோயாளிகளின் அந்தரங்கங்களை அவரது ஜேம்ஸ் பாண்டு ஸ்டைல் கைகடிகாரத்தில் உள்ள ரகசிய காமிராவின் மூலம் பதிவுபண்ணி வைத்திருந்த 361 வீடியோ கிளிப்புகள் அம்பலமானது . அவை 2010 ஜூலை முதல் 2012 மே வரை பதிவு செய்யப்பட்டவை.
ஏற்கனவே, இவர் மீது இரண்டு முறை சிறுவயதினருடன் தவறான நடத்தையிலும் ஈடுபட்டது, ஒருமுறை மயக்க மருந்து கொடுத்து உடல்உறவு கொள்ள முயன்றது போன்ற குற்றங்கள் உள்ளிட்ட 40 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், 39 குற்றங்களை பெயின்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால், தன்னுடைய செயல் குறித்து பெயின்ஸ் எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை. இப்புகாரை விசாரித்த துப்பறியும் நிபுணர் மார்க் கரீட் பேசிய போது, "தன்னுடைய தொழிலின் மீது மக்கள் வைத்திருந்த அபார நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்திக்கொண்ட இவன், ஒரு காம கொடூரன்" என கூறியுள்ளார்.
டெர்ஜித் 1993-ம் ஆண்டு, இந்தியாவின் மங்களூர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவ படிப்பை முடித்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் பொது மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் டெர்ஜித் .
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications