உதயகுமாரை சந்தித்து பட்டம் கொடுத்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள்
நெல்லை: இடிந்தகரையில் அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உ.தயகுமாரை சந்தித்த கேரள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் உள்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் ரெனி அய்லின், செயலாளர் இப்ராகிம், தேஜா டிவி நிருபர் முகமது பசீர் மகன் நிஷந்த், போட்டோகிராபர் உன்னிகிருஷ்ணன் மகள் ராக்கி, கார் டிரைவர் அப்துல் ரகுமான் மகன் முஸ்தபா ஆகிய 5 பேர் காலை இடிந்தகரைக்கு வந்து அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரை சந்தித்தனர். அப்போது அவருக்கு ரூ.25,000 ரொக்கமும், மக்கள் போராட்டங்களில் 2012ம் ஆண்டுக்கான சிறந்த மனிதர் என்ற பட்டமும் வழங்கினர்.
இது குறித்து தகவல் கிடைத்த போலீசார் அவர்களை ராதாபுரத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர் போராட்டம் நடந்து வரும் நிலையில் கேரள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் உதயகுமாரை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications