முலாயம்சிங்குக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு- பேனி பிரசாத் வர்மா பேச்சால் சர்ச்சை!

கடந்த சில நாட்களுக்கு முன்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பேசிய பேனி பிரசாத் வர்மா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கிறார். ரவுடியாகவும் கொள்ளைக்காரனாகவும் வலம் வரும் அவர் மாநிலத்தை எப்படி காப்பாற்றுவார்? என்று கூறியிருந்தார்.
இதனால் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் கொந்தளித்துப் போய் பேனி பிரசாத்தை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
லோக்சபாவிலும் இன்று இந்த சம்பவம் எதிரொலித்தது. காலையில் லோக்சபா கூடியதும் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் இப்பிரச்சினையை எழுப்பினர். பேனி பிரசாத் வர்மா மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. ஆனால் பேனி பிரசாத் வர்மாவோ, எனது கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். நான் அமைச்சரவையில் இருந்து வெளியேற மாட்டேன். என்னை நீக்கும்படி கூற முலாயம் சிங் யார்? என்று முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார். இதே சர்ச்சை ராஜ்யசபாவிலும் எதிரொலித்தது. இதனால் இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திரிவேதி, தலைவர்கள் தாங்கள் பேசுவதை கவனமாக கவனிக்க வேண்டும் என்றார்.
மத்திய அரசுக்கு இக்கட்டான சூழ்நிலைகளில் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து காப்பாற்றி வருகிறது சமாஜ்வாடி கட்சி. தற்போது மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறிவிடும் என்ற நிலை இருந்து வருகிறது. இந்த சூழலில் பேனி பிரசாத்தின் பேச்சால் சமாஜ்வாடி கட்சியின் ஆதரவை இழக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் காங்கிரஸ் அனேகமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் எனத் தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications