சென்னை சென்ட்ரலில் சிக்கிய புத்த பிட்சு- ஓட ஓடத் தாக்குதல்!
சென்னை: தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில இடங்களில் சிங்களவர் மீதான தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்றுவருகின்றன.
தஞ்சாவூர் பெரிய கோயிலை பார்வையிட வந்த இலங்கை குழுவில் இடம் பெற்றிருந்த புத்த பிட்சுவை விரட்டி விரட்டி உணர்வாளர்கள் நேற்று தாக்கினர். அவர்கள் அங்கிருந்து தப்பி திருச்சி சென்ற போது இடையே வழிமறித்து தாக்கினர். இது தொடர்பாக மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் சென்னை எழும்பூரில் உள்ள புத்த மடாலயத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை நேற்று நாம் தமிழர் கட்சியினர் நடத்தினர்.
இந்நிலையில் இன்று காலை டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் ரயிலில் இலங்கையை சேர்ந்த 18 பேர் கொண்ட குழு சென்னைக்கு வந்தது. இக்குழுவில் புத்த பிட்சு ஒருவரும் இருந்தார். அவர் மீது தாக்குதல் நடத்த சிலர் முயன்ற போது ரயில் பெட்டிக்குள் ஏறி பதுங்கிக் கொண்டார். அவரை தேடிக் கண்டுபிடித்த இருவர் ரயில் நிலைய வளாகத்தில் துரத்திச் சென்று தாக்குதல் நடத்தினர்.
"அங்க தமிழனைக் கொன்றுவிட்டு இங்க வர்றீங்களோ?" என்ற ஆவேசக் குரலோடு புத்தபிட்சுவுக்கு தர்ம அடி கொடுத்தனர். அக்குழுவில் இருந்த மற்றவர்களை அவர்கள் தாக்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
புத்த பிட்சு மற்றும் யாத்ரீகர்கள் மீதான தனி மனித தாக்குதல் என்பது ஈழத் தமிழர்களுக்கு கூடுதலான சிக்கலையே உருவாக்கும் என்பதை அனைவரும் உணர்வதே நல்லது
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications