சென்னையில் ஆளுநர் மாளிகை, இலங்கை தூதரகம், விமான நிலையம் முற்றுகை- ஆயிரக்கணக்கான மாணவர்கள் கைது!
சென்னை: தமிழீழத் தனியரசு அமைக்க வலியுறுத்தி சென்னை நகரில் மாணவர்கள் நடத்திய திட்டமிட்ட போராட்டத்தால் போலீசார் திகைத்துப் போயினர். கிண்டி ஆளுநர் மாளிகை, நுங்கம்பாக்கம் இலங்கை தூதரகம், மீனம்பாக்கம் விமான நிலையம் ஆகியவற்றை ஒரே நேரத்தில் 3 அணிகளாக பிரிந்து முற்றுகைப் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் சார்பில் இன்று சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் உள்ள 25 கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் ஒன்று திரண்டு முழக்கங்களை எழுப்பியவாறு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர். இதனால் தென் சென்னை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதே நேரத்தில் நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை மாணவர்கள் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த இரண்டு போராட்டங்களைத் தொடர்ந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தையும் 500 மாணவர்கள் முற்றுகையிட முயன்றனர். அவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுவரை கல்லூரி வளாகங்களுக்குள் போராட்டம் நடத்திய மாணவர்கள் தற்போது வீதிக்கு வந்து அணி அணியாக கைதாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications