2ஜி: ராசாவின் நடவடிக்கைகளுக்கு மன்மோகன் சிங் ஒப்புதல் தரவில்லை- பிரதமர் அலுவலகம் மறுப்பு

2ஜி விவகாரத்தில் முறைகேடு நடப்பதற்கு முன் அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் சில தவறான முடிவுகளுக்கு பிரதமரும் பிரதமர் அலுவலகமும் அனுமதி தந்துள்ள விவரம் இப்போது வெளியாகி வருகிறது. இது தொடர்பாக இந்து நாளிதழ் பரபரப்பான விவரங்களை பிரதமர் அலுவலக பைல்களின் காப்பிகளையே ஆதாரமாக வைத்து வெளியிட்டு வருகிறது.
இந் நிலையில் இதை மறுத்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின்போது ராசாவின் நடவடிக்கைகளுக்கு பிரதமரும் அல்லது அவரின் அலுவலகமும் ஒப்புதல் அளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அது முற்றிலும் தவறானது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட காலத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் புதிதாக நுழைந்த நிறுவனங்களுக்கும் இடையே மோதல்கள் இருந்தன. அதனால் இந்த விவகாரம் குறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் இதர சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசனை நடத்தி அதன் அடிப்படையில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் முடிவெடுக்க வேண்டும் என பிரதமர் விரும்பினார்.
அந்த ஆலோசனைகள் முடியும்வரை தன் தரப்பில் கருத்து சொல்வது சரியாக இருக்காது என்றும் பிரதமர் நினைத்தார்.
அதனால் ராசாஎடுத்த முடிவுகளை அவர் மீண்டும் தொலைத் தொடர்புத்துறையின் பரீசிலனைக்கு அனுப்பி வைத்தார். அப்படி அனுப்பும்போது பிரதமர் எழுதிய குறிப்புகளை ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் மற்றும் கட்டணங்களுக்கு அவர் ஒப்புதல் அளித்ததாக எடுத்துக் கொள்ள முடியாது.
இந்த விளக்கத்துக்குப் பிறகும் பிரதமர் அலுவலகம் மீதும் பிரதமர் மீதும் குறை கூறுவது சரியல்ல என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications