புத்த பிச்சுக்கள் மீது தாக்குதல்: சிங்களர்கள் தமிழகம் செல்ல தடை விதிக்க இலங்கை அரசு திட்டம்
கொழும்பு: இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. மேலும் தமிழகம் வநத் 2 புத்த துறவிகள் தாக்கப்பட்டனர். இதனால் சிங்களர்கள் தமிழகத்திற்கு சுற்றுலா செல்ல தடை விதிப்பது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும், இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திர விசாரணை நடத்தக் கோரியும் தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்கள் வலுத்து வருகிறது. இந்நிலையில் இலங்கையில் இருந்து தமிழகம் வந்த 2 புத்த துறவிகள் தாக்கப்பட்டனர். மேலும் சில சிங்கள சுற்றுலாப் பயணிகள் மாநிலத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து இலங்கை மக்கள் தமிழ்நாட்டிற்கு சுற்றுலா செல்ல தடை விதிப்பது குறித்து ராஜபக்சே அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது. இந்த தகவலை இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சக செயலாளர் கருணாதிலக் அமுனுகமா தெரிவித்தார். தமிழ் உணர்வாளர்களின் செயல்களால் இலங்கை மக்களின் பாதுக்பாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையே அமைச்சர் ஆறுமுகன் தொண்டைமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கையில் இருந்து தமிழகம் செல்பவர்களின் பாதுகாப்பை இரு நாட்டு அரசுகளும் உறுதிப்படுத்த வேண்டும். இலங்கை மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதால் இரு நாட்டு உறவில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதே விஷயத்தை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இமெயில் அனுப்பியுள்ளார். கடந்த ஆண்டும் தமிழகம் வந்த இலங்கை மக்கள் தாக்கப்பட்டனர். அப்போது இலங்கை மக்கள் தமிழகம் செல்ல அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications