டாக்டர் ராமதாஸ் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணை ஜூன் 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி பிரபல வார இதழான ஆனந்த விகடனில் பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த பேட்டி வெளி வந்தது.
அதில், ஒரு மாநிலத்தின் காவல்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் அந்த மாநில முதல்வரை நினைத்த நேரத்தில் சந்திக்க வேண்டும். அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடிய வேண்டும். இந்த இரண்டுமே தமிழகத்தில் சாத்தியம் கிடையாது.
இந்தியாவில் எந்த முதல்வராவது இருக்கிற வேலையெல்லாம் விட்டுவிட்டு ஓய்வு எடுக்கிறேன் என்று மாசக்கணக்கா மலையில உட்காந்துட்டு இருக்காங்களா? மக்களைப் பத்தி கவலையே இல்லாமல் மலை மேல தூங்கிட்டு இருக்காங்க என்று கூறியாத செய்தி வெளியானது.
இந்த செய்தி தமிழக முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளதாக தமிழக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து இந்த செய்தியை வெளியிட்ட ஆனந்த விகடன் ஆசிரியர், பதிப்பாளர், வெளியீட்டாளர் மற்றும் பேட்டியளித்த ராமதாஸ் ஆகியோர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடக் கோரி முதல்வர் ஜெயலிலதா சார்பில் சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதி கலையரசன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன், அரசு சிறப்பு வழக்கறிஞர் அசோகன் ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கு விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு நீதிபதி கலையரசன் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications