தலைமையின் முடிவே எனது முடிவு: மு.க.அழகிரி: பதவி விலகும் அமைச்சர்கள் யார், யார்?

இலங்கை விவகாரம் தொடர்பாக, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியில் இருந்து திமுக விலகுவதாக அதன் தலைவர் கருணாநிதி இன்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து திமுக அமைச்சர்களும் ராஜினாமா செய்யவுள்ளனர்.
இந் நிலையில் இது குறித்து அழகிரியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, தலைமை முடிவே எனது முடிவும் என்று மட்டும் கூறிவிட்டு வேறு எதுவும் கூறாமல் சென்றுவிட்டார்.
நாடாளுமன்ற லோக்சபாவில் திமுகவுக்கு 18 எம்பிக்கள் உள்ளனர். மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு 5 அமைச்சர்கள் உள்ளனர்.
இதில் மு.க. அழகிரி மட்டுமே கேபினட் அமைச்சராவார். மற்றவர்கள் அனைவரும் இணையமைச்சர்கள் ஆவர்.
மு.க.அழகிரி- உரத்துறை அமைச்சர்
பழனிமாணிக்கம்- நிதித்துறை இணையமைச்சர்
நெப்போலியன்- சமூக நீதித்துறை இணையமைச்சர்
ஜெகத்ரட்சகன்- வர்த்தகத்துறை இணையமைச்சர்
காந்திசெல்வன்- நலத்துறை இணையமைச்சர்
முன்னதாக மத்திய தொலைத் தொடர்புத்துறை கேபினட் அமைச்சராக இருந்த ஆ.ராசாவும், ஜவுளித்துறை கேபினட் அமைச்சராக இருந்த தயாநிதி மாறனும் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவர்களுக்குப் பதிலாக வேறு யாரும் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை.
இந் நிலையில் இந்த 5 பேரும் இன்று அல்லது நாளை தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்கவுள்ளனர்.
மார்ச் 25ல் திமுக செயற்குழுக் கூட்டம்:
இந்த நிலையில், இப்போதிருக்கும் சூழ்நிலைகளை விவாதிப்பதற்காக அண்ணா அறிவாயலத்தில் வரும் 25ம் தேதி திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது!












Click it and Unblock the Notifications