என் மகளை இன்ஸ்பெக்டர் டார்ச்சர் செய்தார்: சேலம் பெண் எஸ்.ஐ. தாய் புகார்
சேலம்: சேலம் பெண் எஸ்.ஐ., தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதற்குக் காரணம் இன்ஸ்பெக்டர் செய்த டார்ச்சர்தான் காரணம் என்று அவரது தாயார் கல்யாணி பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
சேலம், ஜட்ஜ் ரோடு சிண்டிகேட் பாங்க் காலனி, பி.கே.சி., ரெசிடென்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் ஜெயபிரபா,வயது-30. இவர் கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணி புரிந்தார்.
இவருக்கும் இன்ஸ்பெக்டர் ராஜதுரைக்கும் சேலத்தில் ஏற்பட்ட போது தொடர்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே, கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
திடீரென்று ராஜதுரை திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். கடந்த பிப்ரவரி 16ம் தேதி சேலத்தில் உள்ள ஜெயப்பிரபா வீட்டிற்கு ராஜதுரை வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ராஜதுரை வீட்டில் இருந்தபோதே எஸ்.ஐ., ஜெயப்பிரதா, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ., சதிஸ், கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் ஆகியோர், இன்ஸ்பெக்டர் ராஜதுரையிடம் விசாரணை நடத்தினர்.
ஆர்.டி.ஓ.,சதிஷின் விசாரனை அறிக்கையின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் ராஜதுரை மீது தற்கொலைக்கு தூண்டியது, தவறாக நடக்க முயற்சித்தல், கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தல், கொலை செய்ய முயற்சித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் சேலம் சிறையில் அடைக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ராஜதுரை மீதான நடவடிக்கை குறித்து தமிழக போலீஸ் ஏ.டி.ஜி.பி., திருநெல்வேலி டி.ஐ.ஜி., எஸ்.பி., ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இதைத்தொடர்ந்து ராஜதுரையை நெல்லை சரக டி.ஐ.ஜி சஸ்பெண்ட் செய்துள்ளார்.
டார்ச்சர் செய்தார் இன்ஸ்பெக்டர்
இந்நிலையில், பெண் எஸ்.ஐ., ஜெயபிரபாவின் தாய் கல்யாணி மற்றும் உறவினர்கள் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, எனது மகள் ஜெயபிரபாவை, ராஜதுரை, சில மாதங்களாவே கொடுமைபடுத்தி வந்தார். இரண்டு மாதத்துக்கு முன் விடுப்பு எடுத்துக் கொண்டு, திருநெல்வேலி வரும்படி தெரிவித்ததால், ஜெயப்பிரபா அங்கு சென்றார்.
அங்கு வைத்து ஜெயப்பிரபாவின் கைகளில் கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தி கொடுமை படுத்தினார். அதற்கான அடையாளங்கள் இறந்த நிலையிலும் அவரின் உடலில் இருந்தது.
மிரட்டிய இன்ஸ்பெக்டர்
கடந்த சில வாரங்களுக்கு முன், சேலம் வந்து ஜெயப்பிரபாவுடன் இருந்த ராஜதுரை, அவரை கொடுமைப்படுத்தினார். சம்பவத்தன்று இருவருக்கும் இடையில் தகராறு அதிகரிக்கவே, ஏழு பவுன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு விரட்டி உள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஜெயப்பிரபா, தனி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
தாமதம் செய்த போலீஸ்
இது குறித்து எங்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில், நாங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து விட்டோம். ஆனால், அவர் எங்களை அந்த அறைக்குள் விட மறுத்து விட்டார்.
அதோடு, அறையின் சாவியை திறக்க தனக்கு வேண்டப்பட்ட, போலீஸ்காரர் பாஸ்கர் என்பவரை வரவழைத்தார். அவரும் மாலை, 4 மணிக்கு மேல் தான் பூட்டை திறக்கும் நபரை அழைத்து வந்து அறையை திறந்தனர்.
கடிதத்தை மறைத்த போலீஸ்
எனது மகள் தற்கொலை செய்துகொண்ட அறை திறக்கப்பட்ட நிலையிலும், எங்களை உள்ளே விட மறுத்து விட்டனர். ஜெயபிரபா தற்கொலை செய்து கொண்ட அறையில் இருந்து போலீஸார் துண்டு சீட்டு ஒன்றை எடுத்தனர். அது ஜெயபிரபாவின் கடிதமாக இருக்கும், ஆனால், அதை நாங்கள் கேட்ட போது, எங்களிடம் காட்ட போலீசார் மறுத்து விட்டனர். அதில் ஃபோன் எண்கள் மட்டுமே இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். போலீஸாரின் இந்த நடவடிக்கை, ராஜதுரையை காப்பாற்றும் வகையில் அமைந்துள்ளது.
நகையை மீட்டுக்கொடுங்க
ஜெயப்பிரபா வைத்திருந்த நகைகள், பணம் ஆகியவற்றை போலீஸ்காரர் பாஸ்கர் வெளியில் எடுத்துச் சென்று விட்டார்.
சேலம், சூரமங்கலத்தில், என் பெயரில் ஜெயப்பிரபா வாங்கிக் கொடுத்த, 1,400 சதுரஅடி நிலத்துக்கான பத்திரம் உட்பட முக்கிய ஆவணங்கள் அனைத்தையும் ராஜதுரை எடுத்துக் சென்று விட்டார். எனவே, அனைத்தையும் மீட்டு, என் பேரனும், ஜெயப்பிரபாவின் மகனுமான ஹரிஷ்க்கு கொடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு ஜெயப்பிரதாவின் தாயார் கூறினார்.












Click it and Unblock the Notifications