திமுகவின் ஆதரவு வாபஸ் முடிவு மறுபரிசீலனைக்கு உட்பட்டதா?: கருணாநிதி பதில்

இலங்கை விவகாரத்தை முன் வைத்து மத்திய அரசில் இருந்து திமுக விலகுவதை இன்று நிருபர்களிடம் அறிவித்த கருணாநிதி நிருபர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்,
கேள்வி: இனிமேல் மத்திய அரசுக்கு பிரச்சனை அடிப்படையில்ஆதரவு தரப்படுமா?
பதில்: பொதுவாக பிரச்சனை அடிப்படையில் ஆதரிப்பது என்பது எல்லா கட்சிகளுமே கடைப்பிடிக்கின்ற முறை தானே.
கேள்வி: அமைச்சரவையில் பங்கேற்காமல், வெளியே இருந்து மத்திய அரசுக்கு ஆதரவு தரப்படுமா?
பதில்: எதுவும் கிடையாது
கேள்வி: மத்தியில் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ஏற்கனவே கூறியிருந்தீர்கள். நீங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவதால் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வரக் கூடுமல்லவா?
பதில்: அதற்கு நாங்கள் பொறுப்பாளி அல்ல
கேள்வி: நேற்றைய தினம் உங்களை மத்திய அமைச்சர்கள் சந்தித்து விட்டுப் போன பிறகு, மத்திய அரசிலிருந்து உங்களுக்கு ஏதாவது தகவல் வந்ததா?
பதில்: பத்திரிகைகளில் வந்த செய்திகள் தான் தகவல். எங்களிடம் யாரும் இதுவரை பேசவில்லை.
கேள்வி: இது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்று நினைக்கிறீர்களா? ஏனென்றால் 2009ம் ஆண்டு இலங்கையில் இறுதிப் போர் நடந்தபோது நீங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளதே?
பதில்: 2009ம் ஆண்டில் நாங்கள் என்ன செய்யவில்லை? அப்போது நாங்கள் ஒன்றும் அமைதியாக இல்லையே.
கேள்வி: பொதுவாக அப்படி ஒரு குற்றச்சாட்டு உங்கள் மீது சொல்லப்பட்டதே?
பதில்: 'பொது' என்பதே ஒரு நல்ல சொல் அல்ல.
கேள்வி: டெசோவின் அடுத்த கட்ட செயல்பாடுகள் எப்படி இருக்கும்?
பதில்: டெசோ சார்பில் ஏற்கனவே நடந்து வரும் செயல்பாடுகள் மேலும் தொடரும்.
கேள்வி: நீங்கள் குறிப்பிட்ட திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வராத பட்சத்தில் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டதாக நினைக்கிறீர்களா?
பதில்: தற்போது ஐ.நா. மன்றமே அப்படி துரோகம் இழைத்து விட்டதோ என்று கருதுகிறேன். இந்திய அரசும் கூடத்தான்.
கேள்வி: 2009ம் ஆண்டு நடந்த இறுதிப் போரின்போது இந்திய அரசு இலங்கை அரசுக்கு உதவி செய்ததாக குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?
பதில்: அது உண்மையாக இருந்தால், எதிர்காலத்தில் விசாரிக்கப்பட வேண்டியவற்றில் அதுவும் ஒன்றாக இருக்கலாம்.
கேள்வி: அப்படிப்பட்ட நிலையில் இந்திய அரசும் சேர்ந்து போர்க் குற்றம் செய்ததாக கருதலாமா?
பதில்: அது உண்மையா இல்லையா என்பது முதலில் தெரியட்டும்.
கேள்வி: நாடாளுமன்றத்தில் நீங்கள் கேட்டபடி திருத்தங்களோடு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், உங்களுடைய தற்போதைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்வீர்களா?
பதில்: அதற்கு நேரம் அதிகமாக இருக்கிறது. இன்று மாலை வரையிலே நேரம் இருக்கிறது, நாளைக்கும் இருக்கிறது, 21ம் தேதிக்கு முன்பும் இருக்கிறது. அதற்குள் நாடாளுமன்றத்தில் நாங்கள் எண்ணியவாறு இந்தத் தீர்மானம் திருத்தங்களோடு முன்மொழியப்பட்டு, விவாதத்திற்குக் கொண்டு வரட்டும்.
கேள்வி: உங்களுடைய மத்திய அமைச்சர்கள் எப்போது ராஜினாமா செய்வார்கள்?
பதில்: இன்று அல்லது நாளை.
இவ்வாறு கருணாநிதி பேட்டியளித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications