இலங்கை அரசுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் போராட்டத்தில் குதித்தனர்… வேலூரில் உண்ணாவிரதம்
வேலூர்: இலங்கைக்கு எதிராக அரசியல் கட்சியினர், மாணவர்கள் போராடி வருவதை அடுத்து ரஜினி ரசிகர்களும் களத்தில் குதித்துள்ளனர். ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி வேலூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்க வேண்டும், இலங்கை போர்க்குற்றம் குறித்த தீர்மானத்தில் இந்தியா திருத்தம் கொண்டுவர வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென தமிழகம் முழுவதும் மாணவர்கள், பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வேலூரில் அண்ணா கலையரங்கம் அருகே மாவட்ட தலைவர் நசுருதீன் தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் சோளிங்கர் பஸ்நிலையம் காமராஜர் சிலை அருகில் இன்று ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
வேலூர் மாவட்ட பொருளாளர் சோளிங்கர் என்.ரவி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கேசவன், முருகன், ஆட்டோ சேகர், சாரதி, தினேஷ், தங்கதுரை, வடிவேலு, கணேஷ் உள்பட 300க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
அரசியல் கட்சியினர் ஆதரவு
ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதத்துக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. பேச்சாளர் மணி, தி.மு.க. மாவட்ட துணை தலைவர் அசோகன், விடுதலை சிறுத்தைகள் சுகுமார், உதவும் உள்ளங்கள் சிவக்குமார் ஆகியோர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். இலங்கை பிரச்சினையில் மாணவர்களைப் போல ரஜினி ரசிகர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் போராட்டம் வலுவடைந்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications