காதலால் பெண்கள் சீரழிக்கப்படுவதால் பெற்றோர் தற்கொலை செய்யும் அவல நிலை: ராமதாஸ் பேச்சு
திருவண்ணாமலை: காதல் என்ற பெயரில் பெண்கள் சீரழிக்கப்படுவதால் பெற்றோர் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை உள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்து உள்ள சென்னாவரம் கிராமத்தில் பாமக கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அன்னை க. சீனுவாசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
ஆண்களும், பெண்களும் நன்றாக படித்து நல்ல வேலைக்கு சென்று பெற்றோரின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும். மேலும் குடும்பத்தையும் மேம்படுத்த வேண்டும். ஆனால் தற்போது பெண்கள் காதல் என்ற பெயரில் சீரழிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களின் பெற்றோர் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இந்த அவல சூழல் உள்ளது.
இந்த வகையில் பல்வேறு சமூகத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அனைத்து சமூகத்தினரும் நன்றாக வாழ வேண்டும். 29 மாவட்டங்களில் நடத்தப்பட்ட அனைத்து சமுதாய பேரவை கூட்டங்களின்போது பல்வேறு சமுதாய தலைவர்கள், நிர்வாகிகள் என்னை சந்தித்து பேசினர்.
தீண்டாமை தற்போது எந்த ரூபத்திலும் இல்லை. ஒருவரை பழிவாங்கவோ அல்லது கைது செய்யவோ தீண்டாமையை பயன்படுத்துகிறார்கள். இதனால் தான் பி.சி.ஆர். சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். மேலும் நாடக காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறுகிறேன். பாமக அனைத்து சமுதாயத்தினருக்கான கட்சி ஆகும் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications