மதுரையில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி: சட்டக் கல்லூரி மாணவர் காயம்

மதுரையில் அனைத்து மாணவர்கள் சேர்ந்து சாலை மறியல் செய்து கொண்டு இருக்கும் பொழுது அங்கு துணை கமிஷனர் தலைமையில் வந்த காவல் துறையினர் மாணவர்களிடம் சென்று மறியல் செய்யக் கூடாது என்று தடியடி நடத்தி உள்ளனர். அதில் மதுரை சட்டகல்லுரி மாணவர் ஐயாத்துரை தாக்கப்பட்டு மயக்க நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமத்திகப்பட்டு இருக்கிறார். ஆனாலும் கடைசி மாணவன் இருக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று 1000க்கும் மேலான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
பிரித்தானிய இந்திய தூதரகத்திற்கு முன் மாணவர்கள் போராட்டம்
தமிழகத்தில் ஈழத் தமிழருக்காக ஏற்பட்டிருக்கும் மாணவர் எழுச்சிக்கு ஆதரவாகவும் மற்றும் ஐந்து அம்சக் கோரிக்கைகளுடன் பிரித்தானிய இந்திய தூதரகத்திற்கு முன்னால் பிரித்தானிய தமிழ் மாணவர்கள் திராவிடன், தினேஸ், தமிழ் ஆகிய 3 மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். இதற்கு ஆரம்பத்தில் பிரித்தானிய காவல் துறையினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தாலும் மதியத்தின் பின்னர் உண்ணாவிரதத்தினை அமைதி வழியில் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியிருக்கின்றனர். இருந்தும் இந்திய தூதரக அதிகாரிகள் இவர்களை அவ்விடத்திலிருந்து கலைப்பதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் அங்கு வசிக்கும் தமிழ் மக்களின் ஆதரவை தற்போது வேண்டியுள்ளனர்.
நாய் சங்கிலியால் கட்டி இழுத்துச் செல்லப்பட்ட ராஜபக்சே
ஐ.நா. பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். இனப்படுகொலை செய்த இலங்கை மீது பன்னாட்டு விசாரணை வேண்டும். இனப்படுகொலைக்கு துணை போன இந்திய அரசை கூண்டிலேற்ற வேண்டும். என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஈழ விடுதலைக்காக தூத்துக்குடி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். தொலைபேசித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டமும் நடத்தினர். முன்னதாக அவர்கள் ராஜபக்சே போன்று வேடமிட்டவரை நாய் சங்கிலியால் கட்டி தெருத்தெருவாக இழுத்துச் சென்றனர்.
மதுரையில் தீக்குளித்த இளைஞர், உடல் கருகி பலியானார்
மதுரை, கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள பாலம் ஸ்டேஷன் ரோடு பெட்ரோல் பங்க்கில் நேற்று இரவு 7 மணிவாக்கில் பைக்கில் வந்த ஒரு வாலிபர் தீடிரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். ‘தனி ஈழம் மலரட்டும்... ராஜபக்சே ஒழிக! என்று கோஷமிட்டவாறு, கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் பற்றி எரிந்த நிலையில், பெட்ரோல் பங்கை நோக்கி ஓடினார்.
உடலில் தீப்பற்றிய நிலையில், இளைஞர் வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், அந்த நபரைத் தடுத்தனர். அருகில், பாதுகாப்புக்காக வைத்திருந்த மணல், தண்ணீர் நிரப்பிய வாளியை எடுத்து, அவர் மீது ஊற்றினர். கீழே விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். அவரை தடுத்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஆரோக்கிய ராஜ் உடம்பில் சில இடங்களில் காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications