ஈழத் தமிழர்கள் சிங்களர்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர்: ஆர்.எஸ்.எஸ்.
சென்னை: இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களர்களுடன் இணைந்து வாழ விரும்புகின்றனர் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தமிழ்நாடு - கேரள மாநிலங்களின் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர்., ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பான அகில பாரத பிரதிநிதிகள் சபாவின் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 15, 16, 17 தேதிகளில் நடைபெற்றது. அப்போது இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதில், சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு அரசியல், சமூக உரிமைகள் வழங்க வேண்டும் என்றும், மறுவாழ்வுப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும். இதற்காக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களர்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர்.
இலங்கையில் ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் "சேவா இன்டர்நேஷனல் லங்கா' என்ற அமைப்பின் மூலம் அமைதியான முறையில் ஆர்.எஸ்.எஸ். சேவைகளை செய்து வருகிறது. கடந்த ஆண்டு 25 கிராமங்களைத் தத்து எடுத்து மக்களுக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் செய்தோம்.இந்த ஆண்டு மேலும் 25 கிராமங்களைத் தத்து எடுக்க உள்ளோம்.
ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டுவதாக அறிவித்தது. ஆனால், தற்போது வரை 2 ஆயிரம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. அதுபோல இடிக்கப்பட்ட கோயில்களை மீண்டும் கட்டுவதற்காக இந்திய அரசு பணம் கொடுத்தது. ஆனால், கோயில்கள் கட்டப்படவில்லை. மறுவாழ்வுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசால் மட்டுமே இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முடியும். அதனைத்தான் இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றார் அவர்.
-
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications