9-வது நாளாக மாணவர் போராட்டம்! பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து கடை அடைப்பு- ஊர்வலம்!!
சென்னை: தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு, இலங்கை மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மாணவர்களின் போராட்டம் 9-வது நாளாக நீடித்து வருகிறது. மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தின் பல இடங்களில் கடை அடைப்பு போராட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.
சென்னை ஆவடியில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இன்று ஊர்வலம் நடத்தினர். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இன்று காலையில் மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

கோவையில் 9-வது நாளாக சட்டக் கல்லூரி மற்றும் பாரதியார் பல்கலைக் கழக மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்றனர். கோவையில் தொழில் முனைவோர்., பொதுமக்கள், மாணவர்கள் இணைந்து பிரம்மாண்ட பேரணியை நடத்தினர்.
சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் 6-வது நாளாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருநெல்வேலியிலும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் பல இடங்களில் வழக்கறிஞர்களும் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உண்ணாவிரதம், ஊர்வலம், கடை அடைப்பு என பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications