2013ல் பீ.பி.ஓ. துறையின் ஏற்றுமதி ரூ. 1,780 கோடி டாலராக அதிகரிக்கும்
டெல்லி: சர்வதேச பொருளாதார மந்தநிலை காணப்பட்டாலும், நடப்பு 2012-13ம் நிதியாஆண்டில் பீ.பி.ஓ. துறையின் ஏற்றுமதி வருவாய் 1,780 கோடி டாலராக உயர வாய்ப்பிருப்பதாக தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான மத்திய இணை அமைச்சர் மிலிந்த் தியோரா மக்களவையில் தெரிவித்தார்.
இது, கடந்த 2009-10ம் நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது இது (1,240 கோடி டாலர்) 44 சதவீதம் அதிகமாகும்.
வெளிநாட்டு நிறுவனங்கள் அவற்றின் பணிகளை இந்திய நிறுவனங்கள் வாயிலாக நிறைவேற்றுகின்றன. இவ்வாறு பெறப்படும் சேவைக்கு பிசினஸ் பிராசஸ் அவுட்சோர்சிங் (பீ.பி.ஓ). என்று பெயர்.
இந்தியாவில் இத்துறையில் 9.17 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
கடந்த 2009ம் ஆண்டில், சர்வதேச அளவில் 3,800 கோடி டாலராக இருந்த பீ.பி.ஓ. துறையின் ஒட்டுமொத்த வருவாய் 2012ம் ஆண்டில் சுமார் 5,000 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
இதே காலத்தில், உலக பீ.பி.ஓ. சேவையில் 34 சதவீதமாக இருந்த இந்தியாவின் பங்கு 37 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த 2009-10ம் நிதி ஆண்டில் இந்திய பீ.பி.ஓ. துறையின் மொத்த வருவாய் 1,470 கோடி டாலராக இருந்தது. இது, இந்த நிதி ஆண்டில் 2,090 கோடி டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications