ராஜபக்சேவுக்கு எதிராக போபாலிலும் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்- கோவையில் ரயில் மறியல்
போபால்: ராஜபக்சேவுக்கு எதிராகவும், அவரைத் தண்டிக்க வேண்டும் என்று கோரியும் தமிழகத்தைத் தாண்டி இந்தியாவின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்த மாணவர் சமுதாயமும் தமிழ் ஈழம் வேண்டியும், ராஜபக்சேவைத் தண்டிக்கக் கோரியும் மாபெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், ரயில் மறியல், உண்ணாவிரதம் என போராட்டங்கள் வெடித்துக் கொண்டுள்ளன.

மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் பெரும் திரளான தமிழர்கள் திரண்டு ராஜபக்சேவை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். அமைதியான முறையில் அவர்கள் ராஜபக்சேவின் இனவெறிப் படுகொலைகளை எதிர்த்துக் கோஷமிட்டனர்.
ராஜபக்சே நிகழ்த்திய இனவெறிப் படுகொலைகளை சித்தரிக்கும் போஸ்டர்கள் உள்ளிட்டவற்றை ஏந்தியபடி அவர்கள் போராட்டம் நடத்தினர்.
கோவையில் ரயில் மறியல்

இதேபோல கோவையில், தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் பேரவை சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ஈழத்தில் நடந்த இனவெறிக் கொலை, மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை நிகழ்த்திய ராஜபக்சேவை கைது செய்து தண்டிக்க வேண்டும், தமிழ் ஈழம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ரயில் என்ஜின் முன்பு மாணவர்களும், மாணவியரும் படுத்தும், உட்கார்ந்தும் போராட்டம் நடத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications