திருப்பதி ஏழுமலையானை பார்க்கவும் இனி அடையாள அட்டை தேவை…

திருமலையில் தரிசன முறை பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய கோவில் துணை அதிகாரி சின்னம்காரி ரமணா கூறியதாவது:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட், வி.வி.ஐ.பி., வி.ஐ.பி. பிரிவுகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்கள் சாமி தரிசனம் செய்ய வரும்போது, கட்டாயமாக தங்களின் அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். அந்த அடையாள அட்டைகளை கோவில் ஊழியர்கள் முறையாக பரிசீலனை செய்து பக்தர்களை தரிசனத்திற்கு அனுப்ப வேண்டும்.
சிபாரிசு கடிதங்கள் கொண்டு வரும் பக்தர்களும் கட்டாயமாக அடையாள அட்டையுடன் வர வேண்டும். வி.ஐ.பி. தரிசன முறை கிரேடு-1, கிரேடு-2, கிரேடு-3 என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். சிபாரிசு கடிதங்கள் கொண்டு வரும் பக்தர்களுக்கு கிரேடு-3 தரிசனம் வழங்கப்படும்.
அடையாள அட்டை கட்டாயம்
கோவிலில் நடக்கும் ஆர்ஜித சேவைகளான சுப்ரபாத சேவை, தோமால சேவை, அர்ச்சன சேவை, அபிஷேக சேவை, அஷ்டதல பாதபத்மாராதனை சேவை, சகஸ்கர கலசாபிஷேக சேவை உள்ளிட்ட டிக்கெட்டுகளில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டாயமாக அடையாள அட்டையுடன் வர வேண்டும்.
இனி காத்திருக்க வேண்டாம்
இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள கம்பார்ட்மெண்ட்டுகளில் 500 பேருக்கு மேல் வைக்கக் கூடாது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தங்க வைக்கப்பட்டு உள்ள பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய காலதாமதம் ஆவதால், அவர்களுக்கு தரிசனம் செய்யும் நேர விவரம் பற்றி புகைப்படத்துடன் கூடிய அடையாள அனுமதி சீட்டு வழங்கப்படும். அந்த அனுமதி சீட்டை பெற்று, பக்தர்கள் வெளியே சென்று விட்டு தரிசன நேரத்தில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்சிற்குள் செல்லலாம் என்று தேவஸ்தான அதிகாரி கூறினார்.
சாமியை பார்க்கத்தான் ஐ.டி கார்டு தேவையில்லாமல் இருந்தது இனி அங்கேயும் கொண்டு வந்து விட்டார்கள் என்கின்றனர் விஐபி பக்தர்கள்.
இலவச தரிசன முறையில் கொண்டு வந்துள்ள மாற்றத்தால் இனி மணிக்கணக்கில் கூண்டிற்குள் காத்திருக்க வேண்டாம். குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று எளிதாக சுவாமி தரிசனம் செய்யலாம் என்கின்றனர் சாதாரண பக்தர்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications