மத்திய அரசு கவலைப்படவில்லை, எனக்கு திருப்தி இல்லை - கருணாநிதி

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு கருணாநிதி நேற்று இரவு அளித்த பேட்டி
கேள்வி: ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இந்தியா தெரிவித்த கருத்து பற்றி உங்கள் கருத்து என்ன? நீங்கள் திருப்தி அடைந்திருக்கிறீர்களா?
பதில்: நான் திருப்தி அடையவில்லை.
கேள்வி : எதனால்?
பதில்: நாங்கள் அமெரிக்கத் தீர்மானத்தில் எவை எவை இடம் பெற வேண்டுமென்று எடுத்துச் சொன்னோமோ, அறிவித்தோமோ அவற்றில் எதுவுமே இடம் பெறவில்லை. அதனால் இது நீர்த்துப் போன அமெரிக்க தீர்மானம் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பிட்ட காலவரையறைக்குள் சுதந்திரமான விசாரணை நடைபெற்று, அவற்றின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திச் சொல்லியிருக்கிறோம்.
அதை இந்தியப் பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்திலும் குறிப்பிட்டிருக்கிறேன். சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்திலும் சுட்டிக் காட்டி அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறேன். அது மாத்திரமல்ல இனப்படுகொலை நடைபெற்றதை மூடி மறைக்கக் கூடாது, அதை ஒப்புக் கொண்டு இலங்கை அரசு விசாரணைக்கு உட்பட வேண்டும் என்று அதையும் திட்டவட்டமாக வலியுறுத்தியிருக்கிறேன்.
இவற்றில் எதையும் ஏற்றுக் கொள்ளாத ஒரு சூழ்நிலையில் அமெரிக்காவின் தீர்மானம் அமெரிக்கா அமெரிக்கா என்று ஒரு வசீகரச் சொல்லை வைத்து, ஏதோ பூதாகாரமாக வரப்போகிறது என்று எல்லோரும் எண்ணியிருந்ததற்கு மாறாக, குறிப்பாக தமிழகத்தின் இளைஞர்கள், மாணவர்கள், வணிகர்கள், வழக்கறிஞர்களும்கூட, அமெரிக்கத் தீர்மானம் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கக் கூடியது, வாழவைக்கக் கூடியது, என்று நம்பியிருந்ததற்கு மாறாக, அந்தத் தீர்மானம் இன்றைய ஜெனீவா நிகழ்ச்சிகளுக்குப் பிறகு நீர்த்துப் போனது என்று கருதக் கூடிய அளவிற்கு உருக்குலைந்து போய் விட்டது, உருப்படாத ஒன்றாகவும் ஆகிவிட்டது.
கேள்வி: இந்தச் சூழ்நிலையில் இலங்கையில் என்ன செய்ய முடியும்?
பதில்: என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி எங்கள் டெசோ ஆலோசித்து முடிவெடுக்கும்.
கேள்வி: நீங்கள் கோரிய 2 திருத்தங்களை இடம் பெறச் செய்து, நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதற்கு நீங்கள் ஒப்புதல் தருவீர்களா?
பதில்: அப்படியொரு நிலைமை வருவதாகத் தெரியவில்லையே? நாடாளுமன்றத்தில் அது நிறைவேற் றப்பட வேண்டுமென்று நாங்கள் கோரியதே, அவ்வாறு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அது இங்கேயிருந்து அனுப்பப்பட வேண்டும், அவர்கள் அதை ஏற்றுக் கொண்டு அமெரிக்க தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்பதற்காகத் தான். அதற்கு இப்போது இடமே இல்லாமல் போய் விட்டது.
கேள்வி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து நீங்கள் வெளியே வந்தது உறுதியானதுதானா?
பதில்: நடைபெறும் நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும் போது சரியான முடிவினைத்தான் நாங்கள் எடுத்திருக்கிறோம் என்று கருதுகிறேன்.
கேள்வி: மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது என்று நினைக்கிறீர்களா?
பதில்: துரோகம் என்று நான் சொல்ல மாட்டேன். கவலைப்படாமல் இருந்து விட்டார்கள்.
கேள்வி: இந்திய அரசு இந்த முயற்சியை முன்பே எடுத்திருக்கலாம் என்று கருதுகிறீர்களா?
பதில்: யூகங்களுக்குப் பதில் சொல்ல முடியாது என்றார் கருணாநிதி.
-
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
திமுக எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியதில் திருப்தி இல்லை.. இருந்தாலும்! சிபிஎம் சண்முகம் பேட்டி!












Click it and Unblock the Notifications