போராட்டத்தின்போது சேர்ந்த குப்பையை அள்ளிப் போட்டு சுத்தப்படுத்திய மாணவர்கள்
Subscribe to Oneindia Tamil

அப்போது குடிநீர் பாக்கெட், தாகம் தணிக்கும் பழங்கள், துண்டு பிரசுரங்கள் என பலவும் பயன்படுத்தப்பட்டன. மாலையில் காந்தி சிலை எதிரில் இலங்கைக்கு எதிராக கோஷம் எழுப்பிய, தீர்மான நகல்களையும் தீயிட்டும் கொளுத்தினர்.
அதையடுத்து போராட்டம் முடிவுக்கு வரவே, கலைய ஆரம்பித்த மாணவர்களில் பலரும்... தாங்கள் போராட்டம் நடத்திய இடத்தில் கிடந்த தண்ணீர் பாக்கெட்டுகள், துண்டு பிரசுரங்கள், தேவையற்ற பிளாஸ்டிக் என அனைத்தையும் சேகரித்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, புறப்பட்டு சென்றனர்.
கோபாவேசத்துடன் போராட்டம் நடத்தியதோடு நில்லாமல் பொறுப்புடன் தங்களால் ஏற்பட்ட குப்பையையும் அப்புறப்படுத்திய மாணவர்களின் செயல் அனைவரையும் கவர்ந்தது.












Click it and Unblock the Notifications