பாரதமாதாவுக்கு குட்பை சொல்லிவிட்டு அமெரிக்காவில் செட்டிலாகத் துடிக்கும் 1 கோடி இந்தியர்கள்
வாஷிங்டன்: 1 கோடி இந்தியர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற விரும்புகிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்று நாம் தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பல இந்தியர்கள் அமெரிக்காவில் செட்டிலாகத் தான் விரும்புகிறார்கள்.
கேலப் என்ற நிறுவனம் 154 நாடுகளில் வசிப்போரிடம் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. அதில் 138 மில்லியன் பேர் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 42 மில்லியன் பேர் இங்கிலாந்திலும், 37 மில்லியன் பேர் கனடாவிலும், 10 மில்லியன் பேர் பிரான்ஸிலும் குடியேற விரும்புகின்றனர்.

அமெரிக்காவில் செட்டிலாகத் துடிக்கும் சீனர்கள்
உலக நாடுகளிலேயே அதிக பட்சமாக 19 மில்லியன் சீனர்கள் அமெரிக்காவில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். சீனர்களைத் தொடர்ந்து 13 மில்லியன் நைஜீரியர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற விரும்புகின்றனர்.

அமெரிக்காவுக்கு பறக்க விரும்பும் 1 கோடி இந்தியர்கள்
சீனர்கள், நைஜீரியர்களைத் தொடர்ந்து 1 கோடி இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேற ஆர்வமாக உள்ளனர்.

அமெரிக்காவை விரும்பாத பாகிஸ்தான், ஈரான் மக்கள்
பாகிஸ்தான் மக்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவில் குடியேற விரும்பவில்லை. மாறாக சவூதி அரேபியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குடியேற விரும்புகின்றனர். இதே போன்று ஈரான் மக்களும் அமெரிக்காவுக்கு பதில் ஜோர்டான் அல்லது லெபனானில் குடியேற விரும்புகின்றனர்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications