டெல்லியில் ஹிஸ்புல் தீவிரவாதி கைது விவகாரத்தில் சர்ச்சை
டெல்லி: டெல்லியில் ஹிஸ்புல் இயக்கத்தைச் சேர்ந்த லியாகத் ஷா கைது செய்யப்பட்டது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று லியாகத் ஷா கைது செய்யப்பட்டார். அப்போது அவர் தம் மீது பொய் வழக்கு போட முயற்சிப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால் டெல்லி போலீசாரோ பயங்கர தாக்குதல் சதித் திட்டத்துடன் டெல்லியில் லியாகத் ஷா தங்கியிருந்ததாக கூறியிருந்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த லியாகத் ஷா, தாம் ஜம்மு காஷ்மீர் போலீசிடம் சரணடைவதாக கூறியிருக்கிறார். இதற்காகவே அவர் நேபாள எல்லையில் சரணடைந்து நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதை ஜம்மு காஷ்மீர் போலீசாரும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவை தொடர்பு கொண்டு பேசிய ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, லியாகத் கைது பற்றி தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications