ஈரோட்டில் பிஸ்கட், சாக்லேட் கொடுத்து 6ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்த பட்டதாரி வாலிபர்
ஈரோடு: ஈரோட்டில் 12 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்ததாக பட்டதாரி வாலிபர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்தவர் ரமேஷ். கூலித் தொழிலாளி. அவரது மகள் யமுனா(12)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 6ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த வாரம் யமுனா ஈரோட்டில் உள்ள சூரம்பட்டியில் இருக்கும் தனது சித்தி வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் சித்தி வெளியே செல்ல யமுனா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விஜி(20) என்ற பட்டதாரி வாலிபர் பிஸ்கட், சாக்லேட் வாங்கிக் கொடுத்து யமுனாவை வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள முள்ளுக்காட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்ற அவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதையடுத்து அவரது பெற்றோர் யமுனாவுடன் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள் தங்கள் மகளுக்கு நேர்ந்தது குறித்து புகார் கொடுத்தனர். அவர்களின் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications