மினி லாரியில் கடத்தப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான போலி மது பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ரூ.3 லட்சம் மதிப்பிலான போலி மதுபானங்கள் ஏற்றி வந்த லாரி பிடிப்பட்டது. தப்பி ஓடிய டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம் பகுதியில் போலி மதுபானங்கள் அதிகம் விற்பனை செய்யப்படுவதாகவும், இரவில் வெளியிடங்களில் இருந்து லாரிகளில் கொண்டு வந்து இங்கு சப்ளை செய்வதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சாத்தான்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையில் போலீஸ்காரர் மத்தேயு, ஊர்காவல்படை வீரர் முத்துகுமார் ஆகியோர் அதிகாலை சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை பகுதியில் ரோந்து வந்து போது வேகமாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தினர். ஆனால் அது நிற்காமல் பேய்குளம் நோக்கி அது வேகமாக சென்றது.
உடனே சந்தேகமடைந்த போலீசார் லாரியை பைக்கில் விரட்டி சென்று மேலபனைக்குளம் அருகே மடக்கி பிடித்தனர்.
உடனடியாக லாரியில் இருந்த டிரைவர் உள்பட 3 பேர் தப்பி ஓடி விட்டனர். லாரியை சோதனையிட்ட போது அதில் 98 பெட்டிகளில் 4847 குவாட்டார் மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது.
இதன் மதிப்பு ரூ.3 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. பின்னர் ஆய்வு நடத்தயதில் அவை அனைத்தும் போலி மதுபானங்கள் என தெரிய வந்தது. இவை எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications