மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் புரட்சி- அதிபர் நாட்டை விட்டு தப்பி ஓட்டம்!
Subscribe to Oneindia Tamil

மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் ராணுவப்புரட்சி மூலம் கடந்த 2003-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிவர் பிரான்கோயிஸ் போஸிஸ். இந்நாட்டில் தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதன் உச்சமாக கடந்த ஓராண்டாக ஆயுதப் போராட்டம் நடைபெற்று வந்தது.இதனிடையே கடந்த ஜனவரி மாதம் அரசுத் தரப்புக்கும், கிளர்ச்சியாளர்கள் தரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 3 ஆண்டுகளில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த அமைதி ஒப்பந்தம் உருவானது.
ஆனால் மோதல் நீடித்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் நேற்று தலைநகர் பங்குய் மீது தாக்குதல் நடத்தி கைப்பற்றினர். அதிபர் மாளிகையையும் கிளர்ச்சியாளர்கள் வசமானது. ஆனால் அதிபர் ஃபிரான்கோயிஸ் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார்.












Click it and Unblock the Notifications