வார்ட்டன் விவகாரம்: நியூயார்க்கில் மோடிக்கு ஆதரவாக பேரணி
நியூயார்க்: வார்ட்டன் இந்தியா பொருளாதாரப் பெருமன்ற மாநாட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பேச அழைத்துவிட்டு பின்னர் பின்வாங்கியதை எதிர்த்து நியூயார்க்கில் கண்டன பேரணி நடத்தப்பட்டது.
வார்ட்டன் இந்தியா பொருளாதாரப் பெருமன்ற 2013 மாநாட்டில் உரை நிகழ்த்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் அங்கு உரை நிகழ்த்த பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மோடி வார்ட்டன் மாநாட்டில் உரை நிகழ்த்த பெனிசில்வேனியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் மனு கொடுத்தனர்.
இதையடுத்து அந்த அழைப்பு திரும்பப் பெறப்பட்டது. வார்ட்டனின் இந்த முடிவை இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் எதிர்த்தன. மேலும் வார்ட்டனில் உரை நிகழ்த்தவிருந்த சில இந்தியர்கள் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்த மாநாட்டில் பேசவில்லை.
மோடி உரை நிகழ்த்த அனுமதி மறுத்ததை எதிர்த்து நியூயார்க்கில் கடந்த சனிக்கிழமை 200 அமெரிக்கர்கள் கலந்து கொண்ட கண்டன பேரணி நடந்தது. அமெரிக்கன்ஸ் ஃபார் ஃப்ரீ ஸ்பீச் என்ற அமைப்பு இந்த பேரணியை நடத்தியது.

மோடி ஆதரவு பேரணி
நியூயார்க்கில் உள்ள 34வது தெரு வழியாக அமெரிக்கர்களின் மோடிக்கு ஆதரவான பேரணி சென்றது.

வார்ட்டனுக்கு எதிரான பேரணி
பேரணியில் மோடி இந்தியாவின் வருங்கால பிரதமர் என்று குறிப்பிட்ட பிளக்கார்டுகள் வைத்திருந்தனர்.

நியூயார்க்கில் பேரணி
பேரணியில் கோடிக்கணக்கான இந்துக்கள் இனியும் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்ற பிளக்கார்டை ஏந்திச் சென்றனர்.

கண்டன பேரணி
மோடிக்கு ஆதரவாக பேரணி சென்ற அமெரிக்கர்கள்.

பேரணி செல்பவர்கள்
பேரணியில் கருத்து சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்த பேனர் ஏந்திச் சென்றனர்.

பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்திற்கு கண்டனம்
பேரணியில் பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தை கண்டித்து பேனர் எடுத்துச் சென்றனர்.

நியூயார்க் பேரணி
பேரணியில் பொய்க்கால் மூலம் நடக்கும் நபர்கள்.

இந்துக்களுக்கு ஆதரவு
பேரணியில் இந்துக்களுக்கு ஆதரவாக பதாகைகள் எடுத்துச் சென்றனர்.

கண்டன பேரணி
பேரணியில் நடந்து செல்லும் அமெரிக்கர்கள்.

மோடிக்கு ஆதரவாக கூடிய கூட்டம்
நியூயார்க்கில் மோடிக்கு ஆதரவாக பேரணியில் கலந்து கொண்டவர்கள்.

பேச்சு சுதந்திரம் தேவை
பேரணியில் பேச்சு சுதந்திரம் தேவை என்று பேனர் பிடித்துச் சென்றனர்.

கோத்ரா சம்பவம் ஜிகாதிகளின் வேலை
கோத்ரா சம்பவம் ஜிகாதிகளின் வேலை என்ற வாசகம் அடங்கிய கார்டை ஏந்திச் சென்றனர்.












Click it and Unblock the Notifications