பஞ்சாபில் பயங்கரம்: ஓடும் காரில் இளம்பெண் கற்பழிப்பு… தூக்கி வீசப்பட்ட கொடூரம்
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 22 வயது இளம்பெண்ணை ஓடும் காரில் நான்கு பேர் கொண்ட கும்பல் நேற்று இரவு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். நேற்று இரவு வேலையை முடித்து விட்டு வீடு திரும்புவதற்காக பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது காரில் வந்த இரண்டு பேர் தன்னை கடத்தினர். பின்னர் அக்காரில் மேலும் இரண்டு பேர் ஏறினர் என்று தெரிவித்துள்ளார்.
நான்கு மணிநேரமாக நகருக்குள் காரில் வலம் வந்த அவர்கள் தன்னுடைய அலரல் சத்தம் வெளியே கேட்கக் கூடாது என்பதற்காக அதிக சவுண்ட் வைத்து பாட்டு போட்டுக் கொண்டு பலாத்காரம் செய்தனர். பின்னர் தன்னை நகரின் பாதுகாப்பு படை பிரிவினர் முகாம் அருகில் காரில் இருந்து தூக்கி வீசிவிட்டனர் என்று அப்பெண் தெரிவித்துள்ளார்.
சாலையில் சென்ற நபர்கள் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமிர்தசரஸ் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்றும் கூறியுள்ளனர்.
டெல்லியில் ஓடும்பேருந்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு பின் நாடு முழுவதும் அதிக அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து தண்டனையை அதிகமாக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும் பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications