நாளை +2 தேர்வு முடிகிறது, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு துவங்குகிறது: 10.6 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழு

பிளஸ் 2 தேர்வு கடந்த 1ம் தேதி துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்வை 8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதி வருகின்றனர். இத்தேர்வு நாளை முடிவடைகிறது. இந்நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை துவங்கி வரும் ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 10,68,838 மாணவ, மாணவியர் 3,012 மையங்களில் எழுதுகின்றனர். தேர்வு எழுதுவோரில் 5,43,152 பேர் மாணவர்கள், 5,25,686 பேர் மாணவிகள் ஆவர். பள்ளியில் படித்து தேர்வும் எழுதும் இவர்களைத் தவிர 50,000க்கும் மேற்பட்ட தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு காலை 10 மணிக்கு துவங்கி பிற்பகல் 12.45 வரை நடைபெறும். சரியாக காலை 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்படும். வினாத்தாளை வாசித்துப் பார்க்க 10 நிமிடம் வழங்கப்படும். இதையடுத்து விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்ய 5 நிமிடம் கொடுக்கப்படும். தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்கவும், முறைகேடுகளை தடுக்கவும் தலைமை ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வினாத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவை மாவட்ட கல்வி அதிகாரிகள் பொறுப்பில் உள்ளன. வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தேர்வு அட்டவணை
மார்ச் 27ம் தேதி - மொழித்தாள்-1
மார்ச் 28ம் தேதி - மொழித்தாள்-2
மார்ச் 29, 30, 31 ஆகிய தேதிகள் விடுமுறை
ஏப்ரல் 1ம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 2ம் தேதி - ஆங்கிலம் 2ம் தாள்
ஏப்ரல் 3, 4 ஆகிய தேதிகள் - தேர்வு இல்லை
ஏப்ரல் 5ம் தேதி - கணிதம்
ஏப்ரல் 6, 7 ஆகிய தேதிகள் - விடுமுறை
ஏப்ரல் 8ம் தேதி - அறிவியல்
ஏப்ரல் 9, 10, 11 ஆகிய தேதிகள் - தேர்வு இல்லை
ஏப்ரல் 12ம் தேதி - சமூக அறிவியல்
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications