வேலூர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் ஆள்மாறாட்டம்: 5 பேர் கைது
வேலூர்: அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு பயிற்சி மையத்தில் ஆள்மாறாட்டம் செய்து பணியில் சேர்ந்ததாக கூறி, 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழிற் பாதுகாப்புபடை வீரர்களுக்கான பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இம்மையத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இவர்களில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 23), சந்தீப்குமார் (24), நரேந்தர் ஜன்கு (26), சச்சின்குமார் (25), சதீஷ் (26) ஆகியோர், சென்ற 2011ம் வருடம் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
பின்னர் இவர்கள் கடந்த ஆண்டு பயிற்சிக்காக தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்துக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில், இவர்கள் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் இவர்களின் கையொப்பம் மற்றும் தடயங்களை சேகரித்து சிம்லாவில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் இவர்கள் எழுத்துத் தேர்வின்போது ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்ததையடுத்து, மத்திய தொழிற் பாதுகாப்புப் படை உதவி ஆணையர் ஜார்ஜ், 5 பேரையும் நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார். அவர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் இவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications