காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு சபாநாயகர் எச்சரிக்கை
சென்னை: சட்டப்பேரவையில் ஆளும்கட்சி எம்.எல்.ஏக்களைப் பார்த்து கையை நீட்டி பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணியை சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் எச்சரித்துள்ளார்.
தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் நேற்று பேரவையில் சபாநாயகர் அறிவித்தார்.
இதனைக் கண்டித்து தேமுதிக, திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் சட்ட பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி வெளிநடப்பு செய்தபோது ஆளும்கட்சி உறுப்பினர்களை நோக்கி கையை நீட்டி ஏதோ பேசினாராம். வெளியே வந்த அவர் ஆளும் கட்சிக்கு எதிராக பேட்டியளித்தார். தேமுதிக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்தது ஜனநாயகப் படுகொலை என்றும் அவர் தெரிவித்தார்.
எம்.எல்.ஏ விஜயதாரணியின் செயலுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்டு பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, பேரவை மரபுக்கும் மாறாக விரலை நீட்டி பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணியை எச்சரிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் யாரும் பேரவை மாண்புக்கு மாறாக நடந்து கொள்ளக் கூடாது என பேரவைத் தலைவர் தனபால் எச்சரிக்கை விடுத்தார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications