வாட்ட ஆரம்பித்தது கோடை.. வடமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க நடவடிக்கையாம்!

தமிழகத்துக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 12,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், இதில் சுமார் 4,500 மெகாவாட் வரை பற்றாக்குறை நிலவுகிறது.
காற்றாலைகளால் கோடை காலத்தில் மிகக் குறைந்த அளவு மின்சாரமே உற்பத்தி செய்ய முடியும். இதனால் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கவுள்ளது.
மேலும் மத்திய தொகுப்பிலிருந்தும் தமிழகத்துக் போதிய மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால் நேற்றைய நிலவரப்படி மொத்த மின் உற்பத்தியின் அளவு 8,888 மெகாவாட் என்ற அளவில் குறைந்துள்ளது.
மார்ச் மாதமே இந்த நிலை என்றால் அடுத்த இரு மாதங்களில் கோடை உச்சத்தை எட்டும் போது மக்களின் நிலையை கற்பனை செய்தாலே பயமாக உள்ளது.
இந் நிலையில் வட மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறதாம்.
எங்கிருந்து, எப்போது, எவ்வளவு மின்சாரம் வாங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தமிழகத்திற்கு ஜூன் மாதத்திலிருந்து 2014 மே மாதம் வரை மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைக்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் முறையான அனுமதி அளித்துள்ளது.
ஒரு யூனிட் ரூ.5க்கு வாங்கவும் அனுமதி வழங்கி உள்ளது. ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஒடிஸ்ஸா மாநிலங்களிலிருந்து இந்த மின்சாரம் வாங்கப்படலாம் என்று தெரிகிறது.
-
"அதெப்படி ஒருத்தனை பார்த்தாலே அடிக்கணும்னு தோனும்" மாஸ்டர் மகேந்திரனை வெளுக்கும் மீம்ஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications