ஷாப்பிங் மாலை தாக்க வருபவர் மனைவி, குழந்தைகளோடு தான் வருவாரா? உமர் அப்துல்லா

டெல்லியில் உள்ள வணிக வளாகம் ஒன்றை தாக்கும் நோக்குடன் வந்ததாகக் கூறி ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த லியாகத் அலி ஷா என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
இந்தியாவில் தாக்குதல் நடத்த வரும் ஒருவர் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு தான் வருவாரா? வணிக வளாகத்தை தாக்க வரும் தீவிரவாதி ஒரு கையில் மனைவியையும், மறுகையில் குழந்தைகளையும் பிடித்துக் கொண்டு ஏதோ சுற்றுலா செல்வது போல இந்தியாவுக்கு வந்துள்ளார் என்பதை முதன்முறையாக கேட்கிறேன். தீவிரவாதிகள் தாக்க வருகையில் ஒரு கையில் துப்பாக்கியும், மறுகையில் வெடிகுண்டும் தான் வைத்திருப்பார்கள்.
இந்த விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து டெல்லி மற்றும் காஷ்மீர் போலீசாரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. டெல்லி போலீசாரோ லியாகத் வணிக வளாகத்தை தாக்க வந்த தீவிரவாதி என்றனர். ஆனால் காஷ்மீர் போலீசாரோ அவர் சரணடைய வந்தவர் என்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications