சென்னை அருகே கப்பல் மோதி மீனவர் பலி.. 2 ஜெர்மன் மாலுமிகள் கைது
சென்னை: சென்னை அருகே இந்தியக் கடல் எல்லைப் பகுதியில், வெளிநாட்டுக் கப்பல் மோதியதில் சென்னை மீனவர் ஆனந்தன் என்பவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக அந்தக் கப்பலில் இருந்த 2 ஜெர்மன் நாட்டு மாலுமிகள் கைது செய்யப்பட்டுள்ளளனர்.
மார்ச் 16ஆம் தேதியன்று சென்னையிலிருந்து 18.5 கி.மீ தொலைவில் ஆன்டிகுவா பார்படா நாட்டுக் கொடியுடன் வந்த சரக்குக் கப்பல் ஒன்று, சென்னையைச் சேர்ந்த மீனவர்களின் படகில் மோதியதில், சென்னை காசிமேட்டைச் சேர்ந்த ஆனந்தன் (45) என்ற மீனவர் கடலுக்குள் மூழ்கினார்.
அவருடன் சென்ற மற்ற இருவரும் மீட்கப்பட்டனர். எம் வி கிரிட்ஜ் என்று பெயரிடப்பட்டிருந்த அந்த கப்பலை ஓட்டி வந்த ஆல்பிரட் உல்ஸ்கோங், ஸ்டீபன் ஹிங்க்சாத் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். சரக்குக்கப்பலின் அடிப்பகுதியை சோதனையிட்டதில் மோதியதற்கான ஆதாரங்கள் இல்லை என்ற போதிலும், சூழ்நிலை சாட்சிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடலோரக் காவல்படையினர் தெரிவித்தனர்.
சென்னை நீதிமன்றம், இவர்களின் பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்துகொண்டு விசாரணை முடியும்வரை நாட்டைவிட்டு செல்லக்கூடாது என்ற உத்தரவின் பேரில், இவ்விருவருக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications