மு.க. அழகிரியை வைத்து அதிமுக போடும் தேர்தல் கணக்கு! திரும்புகிறது 2001?

மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுகிற திமுகவின் முடிவால் கடும் அதிருப்தி அடைந்து போனார் மு.க. அழகிரி. மற்ற திமுக அமைச்சர்களுடன் சேராமல் தனியே போய் ராஜினாமா கொடுத்தார். அத்துடன் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் போன்றோரை தனியே சந்தித்தும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அண்மையில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தின் போது 'சென்னையில்' இருந்து மதுரைக்கு போய் முகாம் அடித்திருந்தார். இப்படி திமுகவில் கலகக் குரலாக தம்மை வெளிப்படுத்தி வருகிறார் மு.க. அழகிரி.
இந்நிலையில்தான் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின்பும் கூட அழகிரிக்கான போலீஸ் பாதுகாப்பை தொடர அதிமுக அரசு உத்தரவிட்டிருக்கிறது. அத்துடன் லோக்சபா தேர்தல் காலம் வரை அழகிரி முகாம் மீது எந்த வழக்கும் போட வேண்டாம் என்றும் அழகிரி தரப்பு வழக்குகளில் கடுமை காட்ட வேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டிருக்கிறlது என்கிறார்கள்.
அதிமுக அரசுக்கு மு.க அழகிரி மீது அப்படி என்ன கரிசனை என்றால் 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தல் களேபரம் சுட்டிக்காட்டப்படுகிறது.
அந்தத் தேர்தலில் திமுக தலைமையோடு மோதிக் கொண்டிருந்த அழகிரி தமக்கும் செல்வாக்கு இருக்கு என்பதைக் காண்பிப்பதற்காக திமுக தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிரான போட்டி வேட்பாளர்களை நிறுத்தி கலகமூட்டினார். அவர் நினைத்தபடியே மறைந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் உள்ளிட்ட சில மூத்த தலைவர்களும் தோற்றுப் போயினர்.
இதனால் எப்படியும் வரும் லோக்சபா தேர்தலிலும் திமுகவுக்கு அழகிரி ஆப்படிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் மீதான இறுக்கத்தை தளர்த்தியிருக்கிறதாம் அதிமுக அரசு. தலைமை மீதான கோபத்தில் லோக்சபா தேர்தலில் ஏதாவது கலாட்டா செய்வதன் மூலம் ரிசல்ட் தங்களுக்கு சாதகமாகிவிடும் என்பதுதான் அதிமுகவின் கணக்காக சொல்லப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications