''ஹைதராபாத் போல சென்னையிலும் குண்டு வெடிக்கும்'': சென்னை போலீசுக்கு வந்த மிரட்டல்!
சென்னை: ஹைதராபாத் போன்று சென்னையிலும் குண்டு வெடிக்கும் என்று மர்ம நபர் ஒருவர் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டியுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தில்சுக்நகரில் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டு குண்டுகள் வெடித்தது. இதில் 16 பேர் பலியாகினர், 50 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய தீவிவாதிகள் தமிழகத்திற்கு தப்பி வந்துவிட்டதாக தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட பல கோவில்களுக்கு தீவிர பாதுகாப்பு போட்டப்பட்டது.
இந்நிலையில் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு ஒரு போன் வந்தது. அதை எடுத்துப் பேசியபோது மறுமுனையில் இருந்த மர்ம ஆசாமி, ஹைதராபாத் போன்று இங்கும் குண்டு வெடிக்கும். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டான். இந்த மிரட்டல் அழைப்பை அடுத்து சென்னை நகரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக புனித வெள்ளிக்குள் எழும்பூரில் இருந்து கிளம்பும் குருவாயூர், அனந்தபுரி மற்றும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை தனியாக கழற்றுவோம் அல்லது தீ வைப்போம் என்று எழும்பூர் ரயில் நிலைய மேலாளர் உமா சங்கருக்கு நேற்று பகல் நேரத்தில் மிரட்டல் கடிதம் வந்தது. இதையடுத்து தென்மாவட்ட ரயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications