பூந்தமல்லி சிறப்பு முகாமில் ஈழத் தமிழர் தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பூந்தமல்லி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களில் ஒருவர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்றார். அவர் தற்போது சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை தேவைகளுக்காக அரசாங்கத்தால் ஒரு நாளைக்கு 70 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது, இந்த ரூபாயில் தான் இவர்களின் அனைத்து தேவைகளையும் இவர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும். இந்த தொகையில் பாதி இவர்களுக்கு பொருட்கள் வாங்கி தரும் தலையாரிக்கே செலவாகிவிடும் என்பதே உண்மை. இதனால் இந்த தொகை தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லையென்றும், இந்த தொகையை உயர்த்தி தர வேண்டும் அல்லது அரசாங்கமே தங்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் கூறி பூந்தமல்லி சிறப்பு முகாம் வாசிகள் கடந்த 9 மாதங்களாக இந்த தொகையை வாங்க மறுத்து புறக்கணித்து வந்தனர். அவர்களுக்கான அடிப்படை தேவைகளை அவர்களை பார்க்க வரும் உறவினர்கள் மூலம் பூர்த்தி செய்து வந்தனர்.

ஆனால் கடந்த 20 நாட்களாக அவர்களை பார்க்க வரும் எந்த உறவினர்களையும் க்யூ பிரிவினர் அனுமதிப்பதில்லை. இனி 10 நாட்களுக்கு முன் அனுமதி வாங்கினால் மட்டுமே பார்க்க அனுமதிக்க முடியும் என்று அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வந்தனர். இதனால் சிறப்பு முகாமில் இருப்பவர்கள் கடந்த 20 நாட்களாக வெளியிலிருந்து எந்த உணவு பொருட்களும் கிடைக்காமல் தனிமைபடுத்தப்பட்டனர். உறவினர்கள் சந்திப்பதற்கு வெளிநாட்டினர் சட்டபிரிவில் எந்த இடத்திலும் இல்லாத இந்த கெடுபிடிகளை எதிர்த்து கடந்த 27ம் தேதி முதல் சந்திரகுமார் என்பவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். சந்திரகுமாரை பார்க்க வந்த அவர் மனைவிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவரும் சிறப்பு முகாம் வாசலிலேயே உண்ணாவிரதத்தை தொடர்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை உண்ணாவிரதம் இருந்த சந்திரகுமாரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். அவரையும் அவரது இரண்டு குழந்தைகளையும் தற்போது புழல் சிறையில் அடைத்து வைத்துள்ளது காவல் துறை .

தனது குடும்பம் கைதான செய்தியை அறிந்த சந்திர குமார் நேற்று இரவு தூக்க மாத்திரைகளை உண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை சக முகாம் வாசிகள் காப்பாற்றி அரசுக்கு தகவல் கொடுத்தனர். அவரை போலீசார் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சந்திர குமார் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்ட விரோதமாக இந்த ஈழத் தமிழர்கள் பூந்தமல்லி சிறையில் வெளிநாட்டவர் சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைகப்பட்டுள்ளனர். அவர்கள் முகாம்களில் குடும்பத்தோடு வாழ சட்டப்படி அனுமதி இருந்தாலும் காவல் துறை அதை அனுமதிப்பதில்லை. அதற்கு எதிராகத் தான் இப்போது சந்திர குமார் போராட்டம் செய்து முடிவில் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சொந்தநாட்டில் ஈழத் தமிழர்கள் அகதி ஆக்கப்பட்டனர். இப்போது தாய் தமிழகத்திலும் அவர்கள் உரிமைகள் இழந்து அகதியாக, அடிமையாக வாழ்கின்றனர். தமிழக அரசு இலங்கைக்கு எதிராக தீர்மானம் போட்ட அதே வேளையில் இங்குள்ள ஈழத் தமிழர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்பதே தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+