மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் போஸ்டர்! ஜி.கே. வாசன் நிராகரிப்பு!!

1996-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி , அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜி.கே. மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உதயமானது. பின்னர் 2001-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடனேயே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தது. பின்னர் மூப்பனார் மறைவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக ஜிகே வாசன் பொறுப்பேற்றார். அவர் தமிழ் மாநில காங்கிரஸை காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.
அண்மைக்காலமாக ஜி.கே.வாசனுக்கும் காங்கிரஸ் மேலிடத்துக்கும் இடையே அதிருப்தி அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் வாசனின் ஆதரவாளரான இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த யுவராஜா சஸ்பென்ட் செய்யட்டார். அப்போது வாசனின் ஆதரவாளர்கள் மீண்டும் தமிழ் மாநில காங்கிரசை உருவாக்க கோரினர்.தற்போது இலங்கைத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் மேலிட நிலைப்பாட்டுக்கு எதிராக வாசன் தொடர்ந்து கருத்துகளைக் கூறி வருகிறார். இதனால் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் உதயமாக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனடிப்படையில்தான் சென்னை உள்ளிட்ட நகரங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. வாசனிடம் இது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், இலங்கை தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சிகளும் தனிமைப்படுத்தும் முயற்சிகளும் நடைபெருகிறது. இதனால்தான் தேவையற்ற செய்திகள் வெளியாகின்றன. இது போன்ற தகவல்கள் அடிப்படையற்ற ஆதரமற்ற செய்திகள்.
உண்மைக்கு புறம்பான செய்திகளுக்கும் தகவல்களுக்கும் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. கற்பனையாகவும் யூகங்களின் அடிப்படையிலும் வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். இதன் தொடர்ச்சியாகத்தான் இயக்கத்தை பலவீனப்படுத்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இவ்வாறு தவறான தகவல்களை பரப்புவோர்களை அனுமதிக்க மாட்டேன். தவறான செயல்களில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்புவோர் மீது தமிழக காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பெயரில் சுவரொட்டி ஒட்டியதாக எஸ். ஸ்ரீகாந்த் என்பவர் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications