அதிமுகவுக்கு தாவுகிறாரா புதிய தமிழகம் எம்.எல்.ஏ ராமசாமி?

தே.மு.தி.க.வின் மைக்கேல் ராயப்பன், தமிழழகன், சுந்தரராஜன் உள்பட 5 பேர் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ ராமசாமியும் அதிமுகவில் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய தமிழகம் கட்சிக்கு 2 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். ஒருவர் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. மற்றொருவர் நிலக்கோட்டை ராமசாமி. டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுவுடன் கூட்டணி சேர்ந்து சட்டசபை தேர்தலை சந்தித்த போதும் தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் அதிமுகவில் நிலக்கோட்டை எம்.எல்.ஏ ராமசாமி ஐக்கியமாகப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதை மறுத்துள்ள ராமசாமி, நானும் எங்கள் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் நெருக்கமாகவே இருக்கிறோம். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. நேற்று இரவு கூட ஒன்றாகவே பேசிக் கொண்டிருந்தோம். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. யாரோ வதந்தியை பரப்பி உள்ளார்கள். என்னை பொறுத்தவரை கட்சி பணியையும், தொகுதி பணியையும் சிறப்பாக செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்குள் எத்தனை அரசியல் நாடகங்கள் நடக்குமோ?
-
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications